அஜித் நடித்து வரும் வலிமை (Valimai) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. நீண்ட நாளாக இந்த படம் குறித்த தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் விதமாக இன்று ஜூலை 11ஆம் தேதி வெளியானது.



 போனி கபூர் தயாரிக்கும் வலிமைக் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்கள். 


கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என அஜித் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பார்ப்பை பல்வேறு விதங்களிலும் வெளிப்படுத்தி வந்தனர்.


ALSO READ | விரைவில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்; வெளியானது முக்கிய தகவல்


தமிழக தேர்தலிலும் வலிமை பட அப்டேட் கேட்ட அவர்கள், யூரோ போட்டி மைதானத்திலும் தங்கள் கோரிக்கையை தொடர்ந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான அப்டேட் கிடைத்துள்ளது.


அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது.


இதனை விரைவில் படமாக்க உள்ளனர். ஒரு சில நாட்களில் ஹைதராபாத்தில் சின்ன சின்ன காட்சிகளை படமாக்கவுள்ளார்கள். இதில் அஜித் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


ALSO READ | Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR