நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தில்  அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். 


நேற்று முன்னிதம் நடைபெற்ற பைக் சேஸிங் காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கை மற்றும் கால்களில் அடிப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் அஜித், சிலநாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துக் கொண்ட போது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.