தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டான நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் மீண்டும் இணைந்து ’வலிமை உருவாக்கி வருகிறார்கள்.


இந்தப் படத்தில் அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  இந்த படத்தில் அஜித் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என கூறப்படுகிறது.


அஜித்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அருண் விஜய், நிக்கி கல்ராணி உள்பட ஒருசிலர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.