இயக்குனர் விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படம் பான் இந்தியா படமாக திரையரங்கில் கூடிய விரைவில் வெளிவர உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தலைவி.  இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.  மதுபாலா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரையரங்கு திறக்கப்பட்டதும் வெளிவர தயாராக உள்ளது. 


தலைவி படத்திற்காக கங்கனா ரனாவத் 20 கிலோவிற்கு மேல் தனது எடையை கூட்டி நடித்துள்ளார்.  ஏற்கனவே குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு வெப்சீரிஸ் வெளியானது.  இதனை கௌதம்மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இயக்கியிருந்தார்.  இந்த வெப் சீரிஸில் ரம்யாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதன் பிறகு நித்யா மேனனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாகும் என்று அறிவிப்பு வெளியாகி கிடப்பில் உள்ளது. 



கடந்த ஏப்ரல் மாதம் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லர் யூடியூபில் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.  தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலமாக திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தலைவி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மிகப் பெரிய விலைக்கு ஓடிடியில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் அதனை நிராகரித்து திரையரங்கில் மட்டுமே வெளியிடும் என்று அப்படத்தின் உறுதியாக உள்ளது.  திரையரங்கில் வெளியான பின்னர் ஓடிடியில் வெளியாகிறது.  இப்படம் ஹிந்தியில் நெட்ஃபிலிக்ஸ்சிலும், தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகளில் அமேசன் பிரைமிலும் வெளிவர இருக்கிறது.  


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe