விஜய் பிறந்தநாளில் ‘தளபதி 61’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
விஜய் நடிக்கும் அவரது 61-வது படத்தையும் அட்லியே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-நம் தேதி வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.