அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். விளையாட்டு மையப்படுத்தி அட்லி எடுக்கவுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.


மேலும் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.


இந்நிலையில், விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, படத்தொகுப்பாளர் ஆண்டனி எல்.ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், பாடலாசிரியர் விவேக், கதிர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர்கள் ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோரும் உள்ளனர். மேலும் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.