மாஸ்டர் மூலம் பிளாக்பஸ்டர் கொடுத்த லோகேஷ் கனராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறார்கள். தற்போது வாரிசு படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தளபதி, தன்னுடைய அடுத்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜூக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளாராம். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அண்மைக்கால பேட்டிகளில் தளபதி விஜய்யை மீண்டும் இயக்க இருப்பதை உறுதி செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இயக்குநர் பாலா கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - வெளியானது சூர்யா 41 ஃபர்ஸ்ட் லுக்


விக்ரம் படம் மெகா ஹிட் அடித்து வசூல் மழை பொழிந்திருக்கும் நிலையில், அவரிடம் தளபதி 67 படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது. அப்போது, தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத வரை, தான் எந்த தகவலையும் சொல்ல முடியாது என்று மட்டுமே கூறினார். மேலும், தளபதி விஜய்க்கு கதை கூறியிருப்பதையும் உறுதி செய்த அவர், அந்தப் படம் லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் கைதி மற்றும் விக்ரம் தொடர்ச்சியாக வருமா? அல்லது மாஸ்டர் படத்தின் தொடர்ச்சியில் செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



இது குறித்து துருவித் துருவி கேட்கும்போதெல்லாம் மழுப்பலான பதிலை கொடுத்து எஸ்கேப்பாகியுள்ள லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்தும் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், அது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் மாஸ்டர் படத்துக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வெளியானது. அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால், அதைப்போலவே ஆகஸ்ட் 24 ஆம் தேதி தங்களின் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட முடிவெடுத்துள்ளார்களாம்.


இப்போதைக்கு இந்த தகவல் வதந்தியாக இருந்தாலும், விஜய் ரசிகர்கள் ஒருவேளை உண்மையாக இருக்குமோ? என நம்பிக்கையுடன் ஆகஸ்ட் 24 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். தளபதி விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைய இருக்கிறார். விக்ரம் படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் லோகேஷ் கனகராஜூம், தளபதி 67 படத்துக்கான பணிகளை தொடங்கிவிட்டாராம். 


மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் - நயன்தாராவை சந்தித்த பாலிவுட் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR