மாநகரம் படம் தொடங்கி விக்ரம் படம்வரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களும் வெற்றி பெற்றவை. குறிப்பாக கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் பெரும் கவனத்தை ஈர்த்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தௌ மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் வெற்றிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் என கூறப்படும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடிப்பதாகவும், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வில்லன் எனவும் தகவல் வெளியானது. மேலும் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உள்ளிட்டோரும் நடிக்கலாம் என கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே படத்தின் கதை, திரைக்கதை எழுதுவதற்காக சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறினார் லோகேஷ். மேலும், விக்ரம் படத்திற்கு ப்ரோமோ ஷூட் செய்யப்பட்டதுபோல் இந்தப் படத்திற்கும் ப்ரோமோவுடன் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிக்க லோகேஷ் திட்டமிட்டிருக்கிறார்.


இந்நிலையில்  இன்று தளபதி 67 படத்தின் பூஜை சென்னை, ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைப்பெறறது. இதில் ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் படங்கள் தயாரிப்பு தரப்பில் இருந்து மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிகிறது. மேலும், தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பாலாவுக்கு துணை நிற்போம் - சூர்யா தரப்பு விளக்கம்


தளபதி 67 படத்தின் ஃபோட்டோஷூட் நாளையும், ப்ரோமோ நாளை மறுநாளிலிருந்து 9ஆம் தேதிவரையும் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து முதல்கட்ட ஷூட்டிங்கை 15 நாள்கள் சென்னையில் நடத்தும் படக்குழு அடுத்தக்கட்ட ஷூட்டிங்குக்கு காஷ்மீர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பூஜையுடன் தொடங்கும் தளபதி 67! லோகி யூனிவெர்சில் உருவாகிறதா?


மேலும் படிக்க | வெறும் 10 செகண்டு விளம்பரம்.. நடிகர் ஜெயம் ரவிக்கு இத்தனை கோடி சம்பளமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ