Thalapathy 67 - Code Red: தளபதி 67 என்றழைக்கப்படும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து தற்போது வெளியாகி கொண்டே இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த், கோலிவுட் நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான், நடனக் கலைஞர் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தனர். 


முன்னதாக, பிப். 1, 2, 3 ஆகிய தேதிகளை குறித்துவைத்துக் கொள்ளவும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோயம்புத்தூரில் கூறியிருந்தார். அதேபோன்று, நேற்று திரிஷா தளபதி 67 படத்தில் நடிப்பதையும், படப்பூஜையின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்து. அதனால், இன்றைய அப்டேட் குறித்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் மற்றும் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சிக்கும் வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.



மேலும் படிக்க | அப்போ அனுஷ்கா.. இப்போ நயன்தாரா..! பாலியல் அழைப்பு குறித்து ஓபனாக பேசிய நயன்!


அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அறிவிக்கும் வகையில், நடிகர் விஜய் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் ஓவியம் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டர் வடிவமைப்பாளர் கோபி பிரச்சன்னா போஸ்டரை வடிவமைக்கும் புகைப்படமும் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. 



குறிப்பாக, லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் பட போஸ்டர்களிலும் ரத்தம் சார்ந்த வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. Lokesh Cinematic Universe என்று கூறப்படும் கைதி, விக்ரம் படங்களின் வரிசையில் தளபதி 67 படமும் இணைவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. அதனை எடுத்துக்கூறும் வகையில்தான் இந்த ரத்தம் இடம்பெற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில், நடிகர் கமல்ஹாசன் சொல்லும் 'Code Red' என்ற வார்த்தைக்கும், தளபதி 67 படத்திற்கும் தொடர்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டு வருகின்றன. 


எனவே, நாளை படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் வரும்போது, தளபதி 67 படம் Lokesh Cinematic Universe உடன் சேர்ந்ததா அல்லது மாஸ்டர், மாநகரம் போன்று Stand Alone படமா என்பதும் உறுதியாகிவிடும் என தெரிகிறது. 


மேலும் படிக்க |  Thalapathy 67: 'தளபதி 67'க்கு மாஸான டைட்டில் வைத்த லோகேஷ்... நாளை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ