Thalapathy 68 Update: நடிகர் விஜய்யின் 68ஆவது படம் குறித்த அறிவிப்பு இன்று திடீரென வெளியாகி சமூக வலைதளங்களை பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மண்ட் நிறுவனம் இதை தயாரிக்கும் நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்திலும், யுவன் சங்கர் ராஜா இசையிலும் இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் விஜய் அவரின் சமூக வலைதளப்பக்கங்களில் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அறிவிப்பு டிரெண்டாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படப்பிடிப்பில் லியோ


நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 


லியோ திரைப்படம் வரும் அக். 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜின் கடந்த திரைப்படமான 'விக்ரம்' பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், இத்திரைப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 


மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்


AGS - VP - U1


இந்த சூழலில், விஜய்யின் 68ஆவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கடந்த வாரம் தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இம்முறை வெங்கட் பிரபு, யுவன், ஏஜிஎஸ் உடன் விஜய் கைகோர்க்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



நடிகர் விஜய், தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தளபதி 68 படம் குறித்த அப்டேட்டை மதியம் 2 மணியளவில் வெளியிட்டார். அதில், 'Next...' என அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, பட அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டார். ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் லவ் டுடே, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படங்களை அடுத்து இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


புதிய கீதைக்கு பின்...


இதை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் கடைசி திரைப்படம் 'கஸ்டடி' திரைப்படமான கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், அவரின் கதை, திரைக்கதை தனி டிரெட் மார்க் ஆகும். 


மங்காத்தாவின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் விஜய் கைக்கோர்ப்பார் என கூறப்பட்டது. ஆனால், அது தற்போது பல ஆண்டுகள் கழித்து நனவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜாவுடன் விஜய் கடைசியாக புதிய கீதை படத்தில் பணியாற்றியிருந்தார். 


யுவன் ட்வீட்


சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில், ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தார். இதனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் - விஜய் காம்போ உருவாக உள்ளது. இது ரசிகர்களை டபுள் குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தான் விஜய்யுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார். 



மேலும் படிக்க |  வெளியானது டக்கர் படத்தின் டிரைலர்...ஆக்ஷனில் மிரட்டும் சித்தார்த்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ