Thalapathy 68: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், 'தளபதி 68' படம் பற்றிய செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தது.  'தளபதி 68' படத்தை அட்லீ இயக்குவார் என்று முன்னர் செய்திகள் வெளியான நிலையில் இப்போது 'தளபதி 68' படத்தை அட்லீ இயக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.  'தளபதி 68' படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு இயக்கப்போவதாக செய்திகள் இணையதளங்களில் வட்டமடித்து வருகின்றது.  'தளபதி 68' படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக கூறப்பட்டாலும் இதுகுறித்த எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 22-ம் தேதி அதாவது விஜய்யின் பிறந்தநாள் தினத்தையொட்டி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Keerthy Suresh: ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்..’ கையில் பூவுடன் போஸ் கொடுக்கும் கீர்த்தி!



வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அஜித்தை வைத்து அவர் இயக்கிய 'மங்காத்தா' படம் பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்தது, அதைப்போல விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக கூறப்படும் 'தளபதி 68' படமும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.  இது ஒருபுறமிருக்க வெங்கட் பிரபு எப்போதுமே யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருவார், எனவே 'தளபதி 68' படத்திலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.  கடந்த 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றி இருந்தார், அதற்க்கு பிறகு இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை.  ரசிகர்களின் நீண்ட நாளைய ஆசையான விஜய் மற்றும் யுவன் காம்போ 'தளபதி 68' படத்தில் இணையும் என்று இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகின்றது.



இருப்பினும் இதுவரை 'தளபதி 68' படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றுவது குறித்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை, அதனால் 'தளபதி 68' படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பணியாற்ற மாட்டார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.  அதேபோல வெங்கட் பிரபு படங்கள் என்றாலே அதில் கண்டிப்பாக அவரது தம்பி பிரேம்ஜி அமரன் நடிப்பார், ஆனால் 'தளபதி 68' படத்தில் பிரேம்ஜி நடிக்கமாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  தற்போது வெங்கட் பிரபு 'தளபதி 68' படத்திற்கான திரைக்கதையை எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதாகவும், நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை தேர்ந்தெடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Leo: லியோ படத்தில் தளபதியின் தந்தையாக சஞ்சய் தத்? கசிந்தது லோகியின் மாஸ்டர் ப்ளான்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ