பெரிய பட்ஜெட் படம்...3 முன்னணி ஹீரோயிகள்: கலக்கும் ஜெயம் ரவி

Jayam Ravi's Genie: ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் ஜெயம்ரவியின் அதிகபட்ச பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 18, 2023, 02:22 PM IST
  • ஜெயம் ரவியின் 32 வது திரைப்படத்தின் முக்கிய அப்டேட்.
  • ஜெயம்ரவியின் அதிகபட்ச பட்ஜெட் படமாக இருக்கும்.
  • ஜெயம் ரவிக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி.
பெரிய பட்ஜெட் படம்...3 முன்னணி ஹீரோயிகள்: கலக்கும் ஜெயம் ரவி title=

நடிகர் ஜெயம் ரவியின் புதிய படத்தின் முக்கிய அப்டேட்: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த படம் உலக அளவில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியன்று வெளியானது. சோழர்களின் வரலாற்றை பற்றி புனைந்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்னம் ஆரம்பத்தில் ஒரே படமாக வெளியிட திட்டமிட்டு, அதன்பின்னர் இரண்டு பாகங்களாக வெளியிட்டார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தமிழகத்தில் ரூ.230 கோடிக்கும் மேல் வசூல் செய்தது மற்றும் படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. பொன்னியின் செல்வன்-2 படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூத்தது.

ஜெயம் ரவியின் 32வது படம்

இந்நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஜெயம் ரவியின் 32வது படம் 100 கோடி பட்ஜெட்டில் ஆரம்பமாக உள்ளது. அந்த படத்தை இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்க உள்ளார். இந்த படத்துக்காகத்தான் அதிகப்படியாக நடிகர் ஜெயம் ரவி 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதேபோல் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் மூன்று முன்னணி நாயகிகள் நடிக்க இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் கீர்த்தி ஷெட்டி, மற்றொருவர் கல்யாணி பிரியதர்ஷன் என்றும் மூன்றாவதாக ஒரு பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Aishwarya Rajesh: “ராஷ்மிகாவை நான் குறைகூறவில்லை..” புஷ்பா பட ஸ்ரீவள்ளி சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா விளக்கம்!

ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு

வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படம் ஜெயம் ரவியின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் ஜூலை மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ஜெயம் ரவியின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த படத்துக்கு 'ஜீனி' என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் இயக்குநர் அவதாரம் 

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் அருண்மொழி வர்மனாக அசத்திய ஜெயம் ரவி இயக்குநர் அகமது இயக்கத்தில் நயன்தாரா உடன் நடித்து வரும் இறைவன் படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் மேலும், கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உடன் இணைந்து ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஜெயம் ரவி இயக்குநர் அவதாரமும் எடுக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘பருத்திவீரன்’ புகழ் செவ்வாழை ராசு காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News