Thalapathy 69 Movie : தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களுள் ஒருவர், விஜய். இவர், தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு தமிழ் சினிமாவிற்கு மொத்தமாக முழுக்கு போட இருக்கிறார். இதையடுத்து, இவரது கடைசி படம் ட்ராப் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காேட் முடித்தவுடன் தளபதி 69:


நடிகர் விஜய், முதன் முறையாக வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்த்திருக்கும் படம், The Greatest Of All Time (GOAT). இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. முதலில் சென்னை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைப்பெற்ற இப்படத்தின் ஷூட்டிங்க், பின்னர் வெளிநாட்டில் நடைப்பெற்றது. இதற்காக விஜய்க்கு லுக் டெஸ்டிங்கும் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு விஜய் இல்லாமல் இலங்கையில் ஒரு பாதி படப்பிடிப்பு  நடைபெற்றது. 


இது, இம்மாதம் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் வருவதால் அன்று கோட் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்த அர்ச்சனா கல்பாத்தி பட அப்டேட்டிற்காக ரசிகர்களை காத்திருக்குமாறு கூறினார். இந்தப் படத்தின் வேலைகள் முடிந்தவுடன், தளபதி 69 படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தளபதி 69: 


விஜயின் 69 ஆவது படத்தை ஹச் வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அதிகார பூர்வ தகவல்கள் இதுவரையில் இன்னும் வெளியாகவில்லை எனினும் ரசிகர்கள் பலர் இதை கன்ஃபார்மே செய்து விட்டனர். இந்த படத்தின் கதைக்கு விஜய் ஓகே சொல்லிவிட்டதாகவும் தற்போது நாயகியை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஒரு அரசியல் பின்னணி கொண்ட கதையாக இருக்கும் என்றும், இதில் விஜய் பெரிய அரசியல் பிரமுகராக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசனின் 233 வது படத்தை இயக்க இருந்த ஹெச் வினோத், இந்த கதையை தான் அவரிடம் கூறியதாகவும் ஆனால் பட வேலைகள் நடைபெறுவதற்கு முன்னரே படம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த கதையில்தான் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!


டிரிப்பா?


விஜய், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகளில் பிஸியாக இருப்பதை தொடர்ந்து, அவரது 69வது படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் விரைவிலேயே முழுநேர அரசியலில் இறங்க இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து திரை வட்டாரங்களில் பேசிக் கொள்பவர்கள் அப்படி ஒன்றும் இல்லை என்றும் கண்டிப்பாக விஜய் இந்த கடைசி படத்தின் நடிப்பார் என்றும் கூறுகின்றனர். 


முழு நேர அரசியல் ஈடுபடும் விஜய்: 


நடிகர் விஜய் கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் நடித்த படங்கள் பலவற்றில் அரசியல் டயலாக் பேசுவதும், படங்கள் மூலம் அரசியல் கட்சிகளை விமர்சிப்பதுமாக இருந்தார். இதனால் அவர் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேலைகளை செய்து கொண்டே இருந்தார். இதனால் இவர் விரைவில் அரசியலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தது போலவே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி அதற்கு தலைவராகவும் ஆனார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருப்பதாகவும் அரசியல் கட்சியை அறிவித்த சமயத்தில் தெரிவித்திருந்தார். அப்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டவுடன் சினிமாவில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கூறினார். இதனால் ரசிகர்கள் இனி விஜயை தியேட்டரில் பார்க்க முடியாதது எண்ணி சோகத்தில் இருக்கின்றனர். 


மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகளா?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ