தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!

Latest News Thalapathy 69 Story : நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது. அது என்ன தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : May 16, 2024, 08:05 PM IST
  • தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்
  • இந்த படத்தின் கதை லீக்!
  • விஜய்யின் கதாப்பாத்திரம் குறித்த தகவல்..
தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு! title=

Latest News Thalapathy 69 Story : தமிழ் திரையுலகில் தற்போது டாப் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், விரைவில் அரசியலுக்குள் நுழைய இருக்கிறார். இந்த நிலையில், அவரது கடைசி படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திரையுலகை விட்டு விலகும் விஜய்!

தமிழ் திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக கொடிக்கட்டி பறந்து வருபவர், நடிகர் விஜய். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் திரையுலகிற்குள் வந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடினார். காதல் கதைகளில் ரொமாண்டிக் ஹீரோவாக நடித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக ஆக்ஷன் கதைகளில் மட்டும்தான் நடித்து வருகிறார். கடைசியாக, கடந்த ஆண்டு இவர் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி (விமர்சனங்களில் அடி வாங்கினாலும்) ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 

விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வெளியானாலும், அதை கடந்த பிப்ரவரி மாதம்தான் அவரே உறுதிப்படுத்தினார். ‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் பெயரில் புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்த இவர், 2026ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியட இருப்பதாக அறிவித்தார். தற்போது GOAT (The Greatest of All Time) படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய், அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது கடைசி படம் என்றும் ரசிகர்கள் உறுதிப்படுத்தி விட்டனர். 

தளபதி 69:

தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கான கதை எழுதும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, அவை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கும் GOAT படத்தில் பிசியாக இருக்கும் விஜய், இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் தளபதி 69 படத்தில் கலந்து கொள்வார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய்க்கு, இதுவே கடைசி படம் என்பதால் இந்த படம் கண்டிப்பாக அரசியல் கலந்து, மக்களுக்கு கருத்து சொல்லும் படமாக இருக்கும் என கூறப்பட்டு வந்ததது. இந்த நிலையில், இப்படத்தின் கதை என்ன என்பது குறித்த விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | ‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!

கதை இதுதானா?

தளபதி 69 படத்தில், நடிகர் விஜய் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைவனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது அரசியல் படம் என்பதால், விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்த ஜாடை மாடை டைலாக்குகள் இந்த படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

கமலுக்காக வைத்திருந்த கதையா?

ஹெச்.வினோத், கமல் ஹாசனின் 233வது படத்தை இயக்க இருந்தார். ஆனால் வெளியில் சொல்லப்படாத காரணங்களினால் இந்த படத்தின் பணிகள் இழுத்து மூடப்பட்டன. இதையடுத்துதான் ஹெச்.வினோத் விஜய் படத்தை இயக்க இருக்கும் தகவல் வெளியானது. இது, கமல் ஹாசனுக்காக அவர் வைத்திருந்த கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகள்?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News