கே.வி.என் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கிறது, தளபதி 69 திரைப்படம்.  சில நாட்களுக்கு முன்புதான், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாகத் தளபதி விஜய்யின் கடைசிப் படத்தில் நடிக்கப் போகும் நடிகை, நடிகர்கள் யார்? யார்? என்பது குறித்த அறிவுப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபை டியோல் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 69 வில்லன்:


தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பது குறித்த அப்டேட்களை  இரு தினங்களாக படக்குழு வெளியிட்டிருக்கிறது. ‘அனிமல்’ படத்தின் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் பாபி டியோல் விஜய்க்கு வில்லனாக களமிறங்குகிறார். இவர் அடுத்து ரிலீசாகவுள்ள சூர்யாவின் கங்குவா படத்தின் வில்லனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் இணைந்து நடித்திருந்தார். விஜய்யின் கடைசி படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பூஜா ஹெக்டே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?


ஷூட்டிங் எப்போது? 


இன்னும் பெயர் சூட்டப்படாத தளபதி 69 படத்தின் ஷூட்டிங், எப்போது என்ற ஆர்வம் ரசிகர்களின் மனங்களில் மேலோங்கி இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தின் பூஜை அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 


தளபதி விஜய்: 


சமீபத்தில் நடிகர் விஜய்யின் 68வது படமான ‘கோட்’ வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் விஜய்க்கு பெரும் வெற்றியைத் தந்தது. இதில் இடம் பெற்ற ‘மட்ட’ பாடல் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. சமூக வலைத்தளத்தில் பாடல் வெளியாகி சில நிமிடங்களிலே அதிக பார்வையாளர்கள் பார்த்த பாடலாகக் அமைந்தது. இந்தப் படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைத் ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத 51 வயது நடிகர்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ