முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் தளபதி 69! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Thalapathy 69 Update: நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  ஹச் வினோத் இந்த படத்தை இயக்க உள்ளார்.

 

1 /6

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார் நடிகர் விஜய். மேலும் சினிமாவில் இருந்து முழுவதும் விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.   

2 /6

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விஜய்யின் 68 வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இந்த மாதம் வெளியானது. படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது.   

3 /6

இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான 69வது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்தது.   

4 /6

தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்க உள்ளார் என்றும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.   

5 /6

KVN தயாரிப்பு நிறுவனம் தமிழில் முதல் முறையாக இந்த படத்தை தயாரிக்க உள்ளது.  மேலும் தளபதி விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார்.   

6 /6

முழுக்க அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.  அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.