சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் டிஜிட்டல் தளத்தில் வெளிவரவுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஜனவரி 29 ஆம் தேதி பிரீமியர் ஆகும் என அமேசான் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கி சேவியர் பிரிட்டோ தயாரித்த இப்படம் பொங்கலில் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


சிறார் திருத்த மையத்திற்கு அனுப்பப்படும் ஜான் துரைராஜ் (விஜய்) என்ற பேராசிரியரின் கதைதான் மாஸ்டர் படம். இந்த மையத்தில் இருக்கும் சிறுவர்களை குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் பவானி (விஜய் சேதுபதி) என்ற ரௌடியுடன் நாயகனுக்கு மோதல் எற்படுகிறது. இந்த மோதலின் பின்னணியில் கதைக்களம் நகர்கிறது.



இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள அமேசான் (Amazon) பிரைம் வீடியோவில் ரசிகர்கள் இப்படத்தை ரசிக்க முடியும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக விஜய் கூறினார்.


"ஜானுக்கும் பவானிக்கும் இடையிலான சுவாரஸ்யமான மோதல்களும் சண்டைகளும் பார்வையாளர்களை அதிரடி ஆக்ஷன் மற்றும் பலவித உணர்ச்சிகளால் மூழ்கடிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று விஜய் (Vijay) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


அமேசான் பிரைம் வீடியோவில் படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு வருவது மிகவும் நல்ல விஷயம் என்று விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கூறினார்.


ALSO READ: #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos


"அமேசான் பிரைம் வீடியோவில் படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு மூலம், வீட்டிலிருந்தே பார்க்க விரும்பும் பார்வையாளர்களையும், மற்ற வகைகளில் அடைய சாத்தியமில்லாத பகுதிகளில் இருக்கும் பார்வையாளர்களையும் நாங்கள் சென்றடைய முடியும்” என்று அவர் கூறினார்.


இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் மாஸ்டர் ஒன்றாகும் என்றும், இந்தியா மற்றும் 240 நாடுகளில் உள்ள பிரைம் உறுப்பினர்களிடம் இந்த திரைப்படத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நிறுவனம் மகிழ்ச்சியடைவதாகவும் இந்தியாவின் அமேசான் பிரைம் வீடியோவின் உள்ளடக்க இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் தெரிவித்தார்.


"இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம், இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள், தங்கள் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியிலிருந்து இந்த தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ரசிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று சுப்பிரமணியம் மேலும் கூறினார்.


மாஸ்டரில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரேமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.


ALSO READ: நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR