#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos

இணையத்தை கலக்கிகொண்டிருக்கும் இந்த புகைப்படங்களில் தனது தாய் ஷாலினி, சித்தி ஷாம்லி மற்றும் மாமா ரிச்சர்டுடன் அவர் காணப்படுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 11:13 AM IST
  • சமீபத்தில் ஷாலினி அஜித் தனது மகன் ஆத்விக்குடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்.
  • ஆத்விக்கின் புகைப்படங்கள் #KuttyThala என்ற ஹேஷ்டாக்குடன் இணையத்தில் வெளிவந்தன.
  • ஆத்விக்கின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos  title=

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் தல அஜித் செய்யும் ஒவ்வொரு விஷயமும் டிரெண்ட் ஆவது இந்த நாட்களில் வழக்கமாகி விட்டது. கோலிவுட்டின் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிக்கும் திரைப்படங்களில் இருந்தோ, படப்பிடிப்பிலிருந்து படங்கள் கசிந்தாலோ, அல்லது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்களோ, எது வெளிவந்தாலும், அது உடனடியாக டிரெண்டாகி விடுகிறது.

அஜித் (Ajith) மட்டுமல்ல, அவரது குழந்தைகளான அனௌஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளிவரும் போதெல்லாம் வைரலாகின்றன.

No description available.

சமீபத்தில் ஷாலினி அஜித் தனது மகன் ஆத்விக்குடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டார். அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட ஆத்விக்கின் புகைப்படங்கள் #KuttyThala என்ற கேஷ்டாக்குடன் இணையத்தில் வெளிவந்தன. அஜித் ஷாலினியின் அருமை மகன் ஆத்விக்கின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி (Viral) வருகின்றன.

 

இணையத்தை கலக்கிகொண்டிருக்கும் இந்த புகைப்படங்களில் தனது தாய் ஷாலினி, சித்தி ஷாம்லி மற்றும் மாமா ரிச்சர்டுடன் அவர் காணப்படுகிறார். தல அஜித்தின் ரசிகர்கள் ஆத்விக்கின் க்யூட் படங்களை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

No description available.

ALSO READ: நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?

ALSO READ: மனதைக் கவரும் முதல் விமர்சனத்தை பெற்றது தனுஷின் 'கர்ணன்'

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News