கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷைப் புகழ்ந்து தள்ளிய தங்கர் பச்சான்
செல்ஃபி திரைப்படம் ஜி.வி.பிரகாஷின் திரைப் பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் என்றும், கௌதம் மேனன் நடிப்புதான் படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகின்றது என்றும் இயக்குநர் தங்கர் பச்சான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
செல்ஃபி திரைப்படம் ஜி.வி.பிரகாஷின் திரைப் பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் என்றும், கௌதம் மேனன் நடிப்புதான் படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகின்றது என்றும் இயக்குநர் தங்கர் பச்சான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன், வர்ஷா பொல்லாமா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, சங்கிலி முருகன், குணாநிதி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் செல்ஃபி. மதிமாறன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. விஷ்ணு ராமசாமி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்ததுடன், படத்துக்கு இசையும் அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு செல்ஃபி படத்தின் சிறப்புத் திரையிடல் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு படம் பார்த்த இயக்குநர் தங்கர் பச்சான் படம் குறித்த தன் பார்வையைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் அவர் எழுதி வெளியிட்ட பதிவு:
''எச்சரிக்கை!
கல்விக்கூடங்கள் பணம் கொள்ளையடிக்கும் கூடங்களாக உருவாக்கப்பட்டப்பின் தமிழ்நாடு அதன் கல்வியின் தரத்தை இழந்து வருகின்றது. இந்த தனியார் கல்விக்கூடங்கள் எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில் அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் எனும் உண்மையை நேர்த்தியாக பொருள் உரைக்க பதிவு செய்வதுதான் “செல்ஃபி” திரைப்படம்.
மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்!
மதிமாறன் எனும் புதிய இயக்குநரின் ஆற்றலும் திறமையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும் அறிமுக நடிகரின் இயல்பான மனம் கவரும் நடிப்பாற்றல் நம்பிக்கை ஊட்டுகின்றன. G.V. பிரகாஷ் முதன்மைப் பாத்திரத்தைத் தாங்கி நிற்கின்றார்! இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அவரின் திரைப்பயணத்தை மேலும் விரிவுபடுத்தும்!
முழு திரைக்கதையின் மையப்புள்ளியான எதிர் நாயகன் பாத்திரத்தில் கௌதம் மேனன் நடிப்புதான் இத்திரைப்படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகின்றது. திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் சிறு பிசகில்லாமல் நடிப்பது ஒன்றே இயக்குநரின் திறனைப் பறை சாற்றும். கடலூர் மாவட்ட வட்டார வழக்கு மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களைக் காப்பாற்றுவதாக கூறப்படும் நான்கு தூண்களும் அதன் மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்கள்தான் அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின் சிக்கல் சீர்கேடுகள் குறித்துக் கேள்வி எழுப்புகின்றன. “செல்ஃபி” அதனைத் திறம்படச் செய்திருக்கின்றது. வெறும் பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இடையில் இப்படைப்பின் வரவு கவனத்துக்குரியது''.
இவ்வாறு தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | வலிமை பாணியில் பீஸ்ட் : அப்டேட் கேட்டு தவிக்கும் ரசிகர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G