கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன் நேற்று கொல்கத்தா சென்றார். அப்பொழுது அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே கமல்ஹாசன் கேரள சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அதன்பிறகு சென்னை வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நட்கர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசி இருப்பது, அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியதை அடுத்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 


மம்தாஜி அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அழைப்பதற்காகவும், என் சினிமா குடும்பத்தை பெருமைப்படுத்தி கௌரவிப்பதற்காகவும் நன்றி. இந்த குடும்பத்தின் ஒருவனாய் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். ஒற்றுமை மற்றும் வேற்றுமை என பன்முகத்தன்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். உங்கள் லண்டன் பயணத்திற்கான எனது வாழ்த்துக்கள்.