பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தர்ஷன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.  சாட்டை படத்தின் மூலம் அறிமுகமான மகிமா நம்பியார் தமிழில் சில முக்கிய படங்களில் நடித்துள்ளார்.  இவர்கள் இருவரும் இணைந்து எம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள நாடு என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சத்தியா இசையமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ரவுடியுடன் வசமாக சிக்கும் மகா.. நடக்க போவது என்ன?


கொல்லிமலையில் உள்ள தேவநாடு என்ற மலைவாழ் கிராமத்தில் கதை நடக்கிறது. எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு சிறு கிராமமாக தேவநாடு உள்ளது.  இந்த ஊரில் மருத்துவமனை இருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படுகிறது, இதனால் கிராம மக்கள் போராடி ஒரு மருத்துவரை வர வைக்கின்றனர். மகிமா நம்பியார் இந்த ஊருக்கு மருத்துவராக வருகிறார், ஆனால் அவருக்கும் அந்த ஊர் பிடிக்கவில்லை. டிரான்ஸ்பர் வாங்கி வேறு இடத்திற்கு செல்ல திட்டமிடுகிறார்.  தேவநாடு ஊரின் தலைவராக இருக்கும் சிங்கம் புலி, அந்த ஊரில் வாழும் தர்ஷன் மற்றும் ஆர்.எஸ். சிவாஜி ஆகியோர் மகிமா நம்பியாருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மருத்துவரான மகிமா அந்த ஊர் மக்கள் சிலரது உயிரை காப்பாற்றுகிறார். அந்த ஊர் மக்கள் அவரை தெய்வமாய் பார்க்கின்றனர். இதனால் அவரை இந்த ஊரை விட்டு அனுப்பக் கூடாது என்று முடிவு செய்து ஊர்மக்கள் சில வேலைகளை செய்கின்றனர். இறுதியில் அவர் ஊரை விட்டு சென்றாரா அல்லது அங்கே தங்கினாரா என்பதே நாடு படத்தின் கதை.



கதாநாயகன் தர்ஷன் இந்த படத்தில் தனது 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு நாள் இந்த நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்று கேட்கும் அளவிற்கு சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். ஒரு மலைவாழ் இளைஞனாக வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம். தர்ஷனின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் ஊர் தலைவராக சிங்கம் புலி வழக்கம்போல தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  சிங்கம்புலி மகனாக நடித்திருப்பவரும் நன்றாக நடித்துள்ளார், அவரது காமெடிகளும் பல இடங்களில் ஒர்க் ஆகி உள்ளது.


மகிமா மிகவும் இலகுவான மனதுடன் மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்து தரும் மருத்துவராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல், அங்கேயும் இருக்க முடியாமல் தவிக்கும் நிலைமையை சிறப்பாக கையாண்டு எதார்த்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். கலெக்டராக வரும் அருள்தாஸ் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.  இயக்குனர் எம் சரவணன் மிகவும் எதார்த்தமான ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.  தமிழ் படங்களில் வழக்கமாக அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சிந்திக்கும் சில விசயங்களை மாற்றி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை காட்டி உள்ளார்.  அதுவே இந்த படத்தின் மூலம், அவருக்கு கிடைத்த வெற்றி.


மருத்துவரை ஊரை விட்டு அனுப்ப கூடாது என்று ஊர் மக்கள் சேர்ந்து செய்யும் சில விஷயங்கள் காமெடியாகவும், அவர்களுது அப்பாவி தனத்தையும் வெளிப்படுத்தியது.  இந்த டிஜிட்டல் உலகத்தில் இப்படியும் சில மலை கிராமங்கள் உள்ளதா என்று நம்மை யோசிக்க வைக்கிறது இந்த நாடு.  நீட் போன்ற ஒரு முக்கிய பிரச்சனையை தொட்டும் தொடாமலும் பேசி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.  ஒரு ஊருக்கு மருத்துவர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே இப்படி ஒரு படைப்பை கொடுத்துள்ளார்.  அரசாங்கத்தின் மீதும், மருத்துவர்களின் மீது குற்றசாட்டுகளை வைக்காமல் எதார்த்தமாக என்ன நடக்கும் எனபதை திரையில் காண்பித்துள்ளார்.  நாடு படத்தின் அடுத்த ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்திவேல் தான். தேவநாடு ஊரையும், அந்த இடத்தின் குளிர்ச்சியையும் நமக்கு கடத்துகிறார்.  பெரிதாக லாஜிக் மிஸ்டேக் இல்லாத இந்த நாடு படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது. நாடு இந்த நாட்டிற்கு தேவையான படம்.


மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ