சென்னை: இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி தெரியும், இது என்ன இந்தி சீரியல் எதிர்ப்பு போராட்டமா என்ற கேள்வி எழுகிறதா? உண்மையில் உளவுத்துறை எப்படி செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு வெப் சீரிஸ். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி பேமிலி மேன் சீரியலின் முதல் பாகம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. பல விருதுகளையும் குவித்துள்ளது. இந்தத் தொடரில் தமிழ் நடிகை பிரியாமணி நடித்திருக்கிறார். சிறந்த நடிப்புக்கான விருதும் அவருக்கு கிடைத்திருக்கிறது.


இந்தி மொழியில் வெளியாகவிருக்கும் The Family Man Season -2 தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சமந்தாவும் நடிக்கிறார்.


Also Read | சிவகார்த்திகேயனின் விழிப்புணர்வு வீடியோ!


தமிழ் ஈழ விடுதலைப்போர்  தொடர்பான காட்சிகள் இந்த முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. ராணுவ சீருடை அணிந்த சமந்தா (தமிழ் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளார்) பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காட்சிகள் இருக்கின்றன.



இது போன்ற சீரியல்கள் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்த தொடரை நிறுத்தவேண்டும் என்று வைகோ கண்டனக் கொடி பிடித்துள்ளார்.


Also Read | உங்கள் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன்: சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் நன்றி


தி பேமிலி மேன்-2 (The Family Man Season -2) இந்தி தொடரை தடை செய்ய வேண்டும் என்று  மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர்   வைகோ கடிதம் எழுதியுள்ளார்.


முன்னதாக, இந்த வலைத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து ”STOP Amazon Prime Video From Releasing Family Man2 Sign the Petition!” என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.


அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த வலைதளத் தொடர் வெளியாகிறது. இந்த சீரியலை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.  


Also Read | Ind vs NZ WTC Final: இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் சவால் நிறைந்தது!  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR