உங்கள் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன்: சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் உருக்கமான நன்றி

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி சமீபத்தில் வெளிவந்தது. திரை உலகில் தேவையில் இருக்கும் நபர்களுக்கு உதவ சிரஞ்சீவி இந்த ஆண்டு  ரூ .15 லட்சம் ஒதுக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : May 21, 2021, 04:07 PM IST
  • மனிதாபிமானத்தின் உதாரணமாக இருக்கிறார் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.
  • பிரச்சனையில் இருக்கும் கலைஞர்களுக்கு தன்னாலான உதவியை செய்து வருகிறார்.
  • தமிழ் திரையுலகின் வில்லன் நடிகரான பொன்னம்பலத்துக்கு தற்போது சிரஞ்சீவி உதவியுள்ளார்.
உங்கள் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன்: சிரஞ்சீவிக்கு பொன்னம்பலம் உருக்கமான நன்றி

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி சமீபத்தில் வெளிவந்தது. திரை உலகில் தேவையில் இருக்கும் நபர்களுக்கு உதவ சிரஞ்சீவி இந்த ஆண்டு  ரூ .15 லட்சம் ஒதுக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. பிரச்சனையில் இருக்கும் கலைஞர்களுக்கு தன்னாலான உதவியை செய்ய அவர் இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அவர் பாவாலா சியாமளா மற்றும் டி.என்.ஆரின் மனைவி ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் அளித்து உதவினார் என்ற செய்தி வெளிவந்திருந்தது. இவர்களைத் தவிர இன்னும் பலரது தேவைகளையும் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் (Tamil Cinema) வில்லன் நடிகரான பொன்னம்பலம் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனக்கும் தேவையான நேரத்தில் உதவினார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார். பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்காக சிரஞ்சீவி சமீபத்தில் 2 லட்சம் ரூபாயை பொன்னம்பலத்தின் வங்கி கணக்குக்கில் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. தெலுங்கு ரசிகர்களிடமும் பிரபலமான பொன்னம்பலம் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: கொரோனா காலத்தில் தெலுங்கு திரை உலகுக்கு good news கொடுத்த சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி

சிரஞ்சீவி செய்த உதவி குறித்து இன்று ஒரு வீடியோ மூலம் தெரிவித்த நடிகர் பொன்னம்பலம், மெகாஸ்டார் சிரஞ்சீவியை மனமார பாராட்டி சரியான சமயத்தில் அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தார். 

"சிரஞ்சீவி (Chiranjeevi) அன்னையாவுக்கு நமஸ்காரம். நீங்கள் எனக்கு அனுப்பிய தொகை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. உங்கள் உதவியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஜெய் ஸ்ரீராம்" என்று பொன்னம்பலம் கூறியுள்ளார். 

இது மட்டுமின்றி இன்னும் பல நற்பணிகளையும் சிரஞ்சீவி செய்து வருகிறார். தெலுங்கு மாநிலங்களில் ஆக்சிஜன் வங்கிகளை (Oxygen Banks) அமைக்க சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் மக்களுக்கு சிரஞ்சீவி உதவுவார் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடிகர் ராம் சரண் முன்னெடுத்துச் செல்வார் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள் இந்த திட்டத்திற்கு முழுமையாக உதவுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: Corona தொற்றை ஓட ஓட விரட்டிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி... No covid-19!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News