தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் இமான், உட்சநட்சத்திரங்கள் முதல் இளம் ஸ்டார்கள் வரை என அனைவரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரின் இசையில் லேட்டஸ்டாக வந்த பல படங்களின் பாடல்கள் ஆல்டைம் ஹிட்டாகவும் அமைந்துள்ளன. விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு தேசிய விருதும் இமானுக்கு கிடைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நெட்பிளிக்ஸில் தவறவிடக்கூடாத தமிழ் படங்கள்


இசைத்துறையில் சிறப்பாக பயணம் சென்று கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு கசப்பானதாக இருந்துள்ளது. இதனால் 12 ஆண்டுகளாக மோனிகா ரிச்சார்டு என்பவருடன் திருமண பந்தத்தில் இருந்த இமான், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். மேலும், சட்டப்படி விவாகரத்தும் பெற்றார். மோனிகாவுக்கும் இமானுக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 



மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த இமான், அண்மையில் எமிலி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். எமிலியின் மகளை தன்னுடைய 3வது மகளாக ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். இமானின் 2வது திருமண புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், இமானின் மறுமணத்துக்கு முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சார்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் வாழ்த்துடன் கூடிய வசைகளையும் சரமாரியாக பாடியுள்ளார்.



மேலும் படிக்க | அடுத்தடுத்து முதல்வர்களுடன் சந்திப்பு. விஜய்யின் திட்டம் என்ன?


அதில், 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை உங்களால் உடனடியாக மாற்றிவிட முடியும் என்றால், உங்களை மாதிரியான நபருடன் 12 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் என நினைக்கும்போது நான் ஒரு முட்டாள் என்பதை உணர்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக மகள்களை நீங்கள் பார்க்கவோ, கவனிக்கவோ இல்லை. ஆனால், அவர்களுக்கு பதிலாக மற்றொருவரை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். என்ன ஆனாலும் என் குழந்தைகளை உங்கள் அப்பாவிடம் இருந்து பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புதுக்குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்குவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். 



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR