பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..! துடித்துப்போன ரசிகர்கள்-இப்போ எப்படி இருக்கு?
Adah Sharma: கேரளா ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமான நடிகை அடா ஷர்மா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டு மொத்த இந்தியர்களையும் திரும்பி பார்க்க வைத்து சர்ச்சைக்குள்ளான படம், தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் நாயகியாக அடா ஷர்மா நடித்திருந்தார். இவர், இப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
மருத்துவமனையில் அனுமதி..!
தி கேரளா ஸ்டோரி பட நாயகி அடா ஷர்மா, அடுத்து கமாண்டோ 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும் நிகழ்ச்சிகளும் தொடங்க இருந்த சமயத்தில்தான் அடா ஷர்மாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடும் வயிற்றுபோக்கு மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக இவர், கடந்த புதன்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடா ஷர்மாவிற்கு அன்று காலையில் இருந்தே வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அடா ஷர்மாவை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதைக்கேட்ட அவரது ரசிகர்கள் துடித்துடித்து போயுள்ளனர்.
மேலும் படிக்க | ஜெயிலர் படம் எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..!
உடலில் படை:
அடா ஷர்மா உட்கொண்ட உணவு அவருக்கு ஒத்துக்கொள்ளாததால் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இதையடுத்து அடா ஷர்மா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், தன் உடலில் படை போன்று சிறு சிரு கட்டிகள் எழும்பியுள்ளதை புகைப்படமாக பதிவிட்டிருந்தார். இது, அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டதை அடுத்து இன்னும் மோசமாகியுள்ளது. இதை சரிசெய்ய அவர் விரைவில் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொள்ள உள்ளதாகவும் அதற்கு முன்னர் அவர் கமேண்டோ 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களுகு நன்றி:
அடா ஷர்மா தனது அலர்ஜி குறித்தும் தனது தற்போதைய நிலை குறித்தும் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், “எனது உடல் நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, அடா ஷர்மா ரசிகர் மன்றத்தில் இருந்து என் நலன் குறித்து கேட்டவர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தனக்கு உடல் நலன் சரியில்லை என தெரிவித்த அவர், அதற்காக மருந்துகளும் ஊசிகளும் எடுத்துக்கொண்டது தனக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். தான் கமாண்டோ படத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஆனால் அதில் முழு கை வைத்த ஆடை அணிந்து வர உள்ளதாகவும் தெரிவித்திருண்டார். தனது அம்மா, உடல் நலனை பார்த்துக்கொள்ள கூறி தன்னை அறிவுருத்தியதாகவும் அதனால் இணைய வழியில் பட ப்ரமோஷன் வேலைகளை தொடருவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி பட சர்ச்சை
சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம், தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தை சுதிப்தோ சென் இயக்கியிருந்தார். நாயகியாக அடா ஷர்மாவும் துணை கதாப்பாத்திரங்களில் சித்தி இட்னானி, யோகிதா பிகானி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்தனர். படம் 200 கோடிக்கும் மேல் வசூலித்தது. பலர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சிலர் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டினர். இதனால் படம் நன்றாகவே பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் செய்தது. இருப்பினும் இப்படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை.
மேலும் படிக்க | ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பகத் பாசில்..! அதுவும் இந்த இயக்குநரின் படத்திலா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ