தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ப்ரூக் பாண்டு சாலையில் உள்ள தனியார் வணிக வளாகமான ப்ரூக் ஃபீல்டில் திரையிடப்பட்டது. இதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ப்ரூக் ஃபீல்டில் உள்ள திரையரங்கில் 1 காட்சி மட்டும் திரையிடப்பட்டது. இதில் 52 பேர் மட்டுமே முன்பதிவு செய்து படத்தை பார்த்தனர். இந்த நிலையில் படத்தைப் பார்த்து வெளியே வந்தவர்கள் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பல்வேறு இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான காட்சிகள் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்மைக்கு புறம்பாக துளியும் ஆதாரமற்ற நிகழ்வுகளை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டு வெளிவந்திருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. முன்னதாக டீசர், ட்ரெய்லர் வெளிவந்த சமயத்திலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கேரளாவில் கடுமையான கண்டனங்களில் எழுந்தன. மேலும் தற்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று முதல் தமிழக மல்டி பிளக்ஸ் திரையரங்கங்களில் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்கு நிர்வாகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?


விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படத்தில் அதா ஷர்மா கதையின் நாயகியாக நடிக்க, சோனியா பலானி, யோகிதா பிலானி, சித்தி இத்னாணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. சென்னையில் அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கங்களில் வெளியானது.


இந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக திரையரங்குகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதாலும் நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதாலும் தமிழ்நாடு முழுவதும் இன்று மே 7ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (மே 7) ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக வளாகங்களுக்கு வரும் மக்களுக்கும் திரையிடப்பட்ட மற்ற திரைப்படங்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.


மேலும் படிக்க | சமந்தா மிகவும்... கஸ்டடி பட பிரமோஷனில் விவாகரத்து பற்றி நாக சைதன்யா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ