வெளியானது சுல்தான் படத்தின் டீஸர்... எதிரிகளை அடித்து நொறுக்கும் கார்த்தி..!!!
டீஸர் கார்த்தி ரசிகரிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில், மகாபாரதத்தை போர் இல்லாம படுச்சு பாருங்க சார் என்று கார்த்தி சொல்லும் வசனம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம்.
சிவ கார்த்திகேயன் நடித்த வெற்றிப் படமான ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், இயக்கும் படம் தான் சுல்தான். இந்த படத்தில் கார்த்தி நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது தவிர நெப்போலியன், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருவதால், கார்த்தியின் (Karthi) ரசிகர்கள் ஆவலுடன் இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீஸர் கார்த்தி ரசிகரிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில், மகாபாரதத்தை போர் இல்லாம படுச்சு பாருங்க சார் என்று கார்த்தி சொல்லும் வசனம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம்.
டீஸரில், கார்த்தி இந்த படத்தில் ஒரு வில்லனை மட்டுமல்ல, பல வில்லன்களுடன் சண்டையிடுகிறார். டீசரில் உள்ள ஒரு கதாபாத்திரம் மகாபாரதம் மற்றும் கிருஷ்ணரின் பொறுமை பற்றி பேசுகிறது, மற்றொரு காட்சியில், பாண்டவர்களுக்கு பதிலாக கிருஷ்ணர் கவுரவர்களை ஆதரித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள் என கார்த்தி ஒருவரிடம் கேட்கிறார்.
எது எப்படியோ இந்த டீஸர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கொரோனா (Corona)பிரச்சனை காரணமாக வெளியீடு தாமதமானதால், ஓடிடி (OTT) தளத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது, ஆனால் இப்போது இந்த படம் ஏப்ரல் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ALSO READ | Watch: ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அட்டகாச நடனம் ஆடிய TN Players! வைரலான Video!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR