கோப்ரா டிரெய்லர் எப்படி இருக்கு? ரசிகர்களின் ரியாக்ஷன்
சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதூர்த்தியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கோப்ரா உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து இர்பான் பதான், 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுக்க உள்ளார். படத்தில் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். விக்ரம் 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளால், இயல்பாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சுழன்றடித்து விக்ரம் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
திருச்சி, மதுரை மற்றும் கோவை என பல்வேறு நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களுடன் உரையாடிய விக்ரம், கோப்ரா படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில், கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்தைப் போலவே பல கெட்டப்புகளில் நடித்திருக்கும் விக்ரமின் நடிப்பு ரசிகர்களுக்கு வியப்பையும் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விதவிதமான கெட்டப்புகளில் விக்ரம் வருவதையும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் நடிப்பையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக டிரெய்லருக்கு கமெண்ட் அடித்துள்ளனர்.
மேலும் படிக்க | அவர் அடிச்ச 10 பேருமே டான்தான்...! - பீனிக்ஸ் மனிதர் விஜயகாந்த் பிறந்த நாள்!
மேலும் படிக்க | பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் உருவான தமிழ் படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ