பல கோடிகள் செலவு செய்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் முதல், குறைவான பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வரை பல படைப்புகள் ஓடிடி தளங்களில் வெளிவருகின்றன. மக்கள், திரையரங்கிற்கு செல்ல விரும்பினாலும், குடும்பத்தினருடன் குறைவான செலவில் பார்க்க பலரும் ஓடிடி தளங்களையே சமீப காலங்களாக விரும்புகின்றனர். வாரா வாரம், ஏதேனும் சில புது படைப்புகள் ஓடிடி தளங்களில் வெளிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவின் பிரபலமான தளங்களாக விளங்கும் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றவை பல படங்களையும் தொடர்களையும் வாரா வாரம் வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில், இன்றும் பல படங்களும் தொடர்களுன் பல தளங்களில் வெளியாகின்றன. அதில், எந்தெந்த படைப்புகளை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்? இதோ முழு விவரம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலை: 


இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி நடித்திருந்த படம், ‘கொலை’. இந்த படம், கடந்த மாதம் (ஜூலை) 21ஆம் தேதி வெளியானது. படத்தின் டைட்டிலிலேயே எதைப்பற்றிய படம் என்பது பல ரசிகர்களுக்கும் விளங்கியிருக்கும். ஒரு கொலை நடக்கிறது, அதை கண்டுபிடிக்கும் துப்பறிவாளராக வருகிறார் விஜய் ஆண்டனி. இறுதியில் கொலைகாரனை கண்டுபிடித்தாரா? தெரிந்து கொள்ள கொலை படத்தை சிம்பளி சவுத் (Simply South) ஓடிடி தளத்தில் படத்தை பார்க்கலாம். இந்த படம், இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க | "ரஜினியின் ஒத்துழைப்பே வெற்றிக்கு காரணம்" நெல்சன் நெகிழ்ச்சி!


மத்தகம்: 


‘குட்நைட்’ திரைப்படத்தில் நடித்து தற்போது பல பெண்களின் உள்ளம் கவர் கள்வனாக இருக்கும் மணிகண்டன் அடுத்து நடித்துள்ள தொடர், மத்தகம். பிரபல நடிகர் அதர்வா இதில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் கதையை பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார். ஆகஸ்டு 18ஆம் தேதியான இன்று, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் மத்தகம் தொடர் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் ‘போர் தொழில்’ பட நாயகி நிகிலா விமல் நடித்திருக்கிறார். அதர்வா, இந்த தொடரில் காவல் அதிகாரியாக வருகிறார். தொடரின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மாஸ்க் கேர்ள்: 


கொரியன் வெப் தொடர்களுக்கு இந்தியாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் நெட்ஃப்ளிக்ஸில் இன்று வெளியாகும் தொடர்தான் மாஸ்க் கேர்ள்.  இதில் ஏழு எபிசோடுகள் உள்ளன. வழக்கமான கொரியன் ட்ராமக்களை போல காதல்-ரொமான்ஸ் என்று இல்லாமல் இந்த தொடர் வித்தியாசமான கதைக்களத்தை பெற்றுள்ளது. 


சத்திரபதி: 


தெலுங்கில் 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், சத்திரபதி. இந்த படத்தின் இந்தி ரீமேக்தான் தற்போதுவ் வெளியாகவுள்ள சத்திரபதி. இப்படம், இந்த ஆண்டு மே மாதம் வெளியானது. தற்போது இந்த படத்தை  ஜீ 5 தளம் வெளியிடுகிறது. இந்த படத்தை இன்று முதல் காணலாம். 


கன்ஸ் அண்ட் குலாப்ஸ்: 


துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ் ஆகியோர் நடித்துள்ள இந்தி தொடர், Guns and Gulaabs. தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள டார்க் காமெடி கதை பாணியை வைத்து இந்த தொடர் எழுதப்பட்டுள்ளது. இதை, இன்று முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். இது, மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 


10 டேஸ் ஆஃப் அ பேட் மேன்: 


10 Days Of A Bad Man வெப் தொடர் த்ரில்லர் புலணாய்வு கதையாக உருவாகியுள்ளது. இதில், ஒரு ஆடம்பர மாளிகையில் நடக்கும் கொலையையும் அதன் பின்னணியையும் கண்டுபிடிக்கும் துப்பறிவாளரின் கதாப்பாத்திரம்தான் ஹீரோ. ஆங்கில மொழியில் இருக்கும் இந்த தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று முதல் காணலாம். 


டெப் VS ஹெர்ட்: 


பிரபல ஆங்கில நடிகர் ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் ஆகியோரின் வழக்கு உலகையே திரும்பி பார்கக் வைத்தது. இதை நெட்ஃப்ளிக்ஸ் தளம், ஒரு டாக்குமெண்டரி தொடராக ரிலீஸ் செய்கிறது. Depp Vs. Heard என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த தொடரை இன்று முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 


பிற தொடர்கள் மற்றும் படங்கள்: 


மேற்கூறியவை மட்டுமன்றி மேலும் சில படங்களும் ஓடிடி தளங்களில் வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 


>அமலா-மலையாளம்-சிம்ப்ளி சவுத்
>ஓ சாதியா-தெலுங்கு-ப்ரைம்
>அண்ண பூர்ணா போட்டோ ஸ்டுடியோ-தெலுங்கு-ஈடிவி வின்
>ஆயிர்தொண்ணு நுனக்கள்-மலையாளம்-சோனி லிவ்
>ஃபு சே ஃபேண்டசி இரண்டாவது சீசன்-இந்தி-ஜியோ சினிமா
>தி போப்ஸ் எக்சார்சிஸ்ட்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்


மேலும் படிக்க | ‘தலைவர் 170’ டைட்டில் இதுதான்..! கசிந்தது ருசிகர அப்டேட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ