வாரம் ஒரு புது படம் திரையரங்குகளில் வெளியாகிறதோ இல்லையாே, ஓடிடி தளங்களில் பல படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. இந்தியாவை பொருத்த வரை, நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஜீ 5 உள்ளிட்ட பல தளங்கள் பிரபலமானவையாக இருக்கின்றன. ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான பல படங்களும் இந்த தளங்களில் வெளியாகின்றன, நேரடியாக சில படங்களும் வெளியிடப்படுகின்றன. இவற்றையடுத்து சில தொடர்களும் வெளியாகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள புது படைப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைவன்:


ஜெயம் ரவி நடிப்பில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான படம், இறைவன். இதில் நயன்தாரா, நரேன், விஜயலக்‌ஷ்மி, ராகுக்ல் போஸ், வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சைக்கோ கொலைகளை மைய்யப்படுத்தி, த்ரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இறைவன் படத்தினை அகமது இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 27ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. 


சந்திரமுகி 2:


ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் ஆகியோரின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியாகியிருந்த படம், சந்திரமுகி 2. ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியானது. வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லக்‌ஷ்மி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தியேட்டரில் வெளியான போது இப்படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுத்தனர். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் வெள்ளிகிழமை அன்று (அக்டோபர் 27ஆம் தேதி) வெளியாக உள்ளது. 


மேலும் படிக்க | மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம்


யாரோ:


க்ரைம்-சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம் யாரோ. இந்த படத்தை சந்தீப் சாய் என்பவர் இயக்கியுள்ளார். ஹீரோவாக வெங்கட் ரெட்டி நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஓடிடியிலும் வெளியாக உள்ளது. ஆஹா தமிழ் தளத்தில் இப்படத்தை வரும் 27ஆம் தேதி முதல் பார்க்கலாம். 


பரம்பொருள்:


அரவிந்த் ராஜ் இயக்கத்தில் கடந்த செப்டமர் மாதம் வெளியாகியிருந்த படம், பரம்பொருள். இந்த படத்தில், சரத்குமார், அமிதாஷ் பிரதான் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த கதை இது. இந்த படத்தினை ஆஹா தமிழ் மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் வரும் 27ஆம் தேதி முதல் பார்க்கலாம். 


ஸ்கந்தா:


தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள படம் ஸ்கந்தா. இந்த படத்தில் ராம் பொத்தினேனி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஸ்ரீலீலா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியாகியிருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி முதல் ஸ்கந்தா படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 


இன்னும் சில...


மேற்கூறியவை மட்டுமன்றி இன்னும் பல படங்களும் தொடர்களும் வரும் 27ஆம் தேதியன்று ஓடிடியில் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படைப்புகள் தெரியுமா?


>சுராபனம்-தெலுங்கு-ஆஹா
>கேஸ் 30-தெலுங்கு-ஆஹா
>துரங்கா 2-இந்தி-ஜீ 5 தொடர் 
>பெயின் ஹஸ்லர்ஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>மாஸ்டர் பீஸ்-மலையாளம்-ஹாட்ஸ்டார் சீரீஸ்
>தி குட் நியூஸ்-இந்தி-ஜியோ சினிமா
>சாங்குரே பங்காரு ராஜா-தெலுங்கு-ஈடிவி வின்
>கிருஷ்ண காடு அண்டே ஒகாரங்கே-தெலுங்கு-ஆஹா


மேலும் படிக்க | Leo Day 6 Box Office: 6 நாளில் 250 கோடி வசூலா? மிரட்டும் விஜய்யின் லியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ