இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்கள்!
2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை குறிப்பிடத்தக்க சில படங்கள் வெளியாகி தற்போது அவை ஓடிடி தளங்களில் காண கிடைக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிம்பு நடிப்பில் 'பத்து தல' மற்றும் சூரி நடிப்பில் 'விடுதலை' போன்ற இரண்டு பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதுதவிர இந்த மாதத்தில் மற்ற சில படங்களும் வெளியாகியுள்ளது, அவை இப்போது இந்த வார இறுதியில் ஓடிடி தளங்களில் காண கிடைக்கிறது. இப்போது ஓடிடி-யில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம்.
பகீரா:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ஒரு உளவியல் காதல் திரில்லர் படம் தான் 'பகீரா'. இப்படத்தில் பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார், இப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படம் நேற்றைய தினம் ஓடிடி தளத்தில் வெளியானது.
மேலும் படிக்க | ரஜினி படத்தில் நடித்ததால் திரை வாழ்கை முடிவுக்கு வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்
அரியவன்:
மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் வெளியான படம் 'அரியவன்', எம்ஜிபி மாஸ் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இஷாவுன் மற்றும் பிரனாலி கோகரே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் நேற்றைய தினம் ஓடிடி தளத்தில் வெளியானது.
அயோத்தி:
ஆர்.மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் மற்றும் சேத்தன் ஆகியோர் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'அயோத்தி'. இப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படம் நேற்றைய தினம் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
அகிலன்:
கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'அகிலன்'. இந்தப் படம் ஒரு போலீஸ் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உள்ளது, இந்த படத்தில் ஜெயம் ரவி கேஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம் நேற்றைய தினம் ஓடிடி தளத்தில் வெளியானது.
மேலும் படிக்க | பத்து தல படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ