ஓடிடி-யில் இந்த 10 மலையாள படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

ஓடிடி-யில் நாம் பார்க்க கிடைக்கும் ஹ்ரிதயம், பீஷ்ம பர்வம், படா, நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற 10 படங்கள் ஐஎம்டிபி-ல் அதிக ரேட்டிங்கை பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2023, 08:32 AM IST
  • மலையாள படங்களை தமிழ் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.
  • பல படங்களை ஓடிடியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஓடிடி-யில் இந்த 10 மலையாள படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க! title=

லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திற்கு 8.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம்.  இந்த படத்தில் மம்மூட்டி, ரம்யா சுவி, அசோகன், ரம்யா பாண்டியன், விபின் அட்லீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராகுல் சதாசிவம் இயக்கத்தில் வெளியான 'பூதகளம்' படத்திற்கு 7.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம்.  இந்த படத்தில் ரேவதி, ஷேன் நிகாம், சஜ்ஜு குரூப், ஜேம்ஸ் இலியா, ஆதிரா படேல் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | 'ஐஸ்வர்யா ராயால் தான் எனக்கு இது கிடைத்தது' - சிம்பு சொன்ன சீக்ரெட்

2022ம் ஆண்டு வெளியான 'ஃப்ரீடம் பைட்' படத்திற்கு 7.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம்.  இப்படத்தில் ரஜிஷா விஜயன், ஜோஜு ஜார்ஜ், சித்தார்த் சிவா, ஸ்ரீண்டா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'ஹ்ரிதயம்' படத்திற்கு 8.1 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.  இப்படத்தில் பிரணவ் மோகன்லால், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியான 'ஜன கன மன' படத்திற்கு 8.3 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம்.  இப்படத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா போன்ற பலர் நடித்துள்ளனர்.

விஷ்ணு மோகன் இயக்கத்தில் வெளியான 'மேப்படியான்' படத்திற்கு 7.2 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.  இப்படத்தில் உன்னி முகுந்தன், கோட்டயம் ரமேஷ், சஜ்ஜு குரூப், அணு வர்கீஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  

வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் வெளியான 'ஒருத்தீ' படத்திற்கு 7.6 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.  இப்படத்தில் சஜ்ஜு குரூப், நவ்யா நாயர், விநாயகன் மற்றும் லலிதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அமல் நீரத் இயக்கத்தில் வெளியான 'பீஷ்ம பர்வம்' படத்திற்கு 7.7 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.  இந்த படத்தில் மம்மூட்டி, சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, நதியா மொய்டு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கமல்.கே.எம் இயக்கத்தில் வெளியான 'படா' படத்திற்கு 7.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.  இந்த படத்தில் குஞ்சகோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன், திலீஷ் போத்தன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லீஜு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'படவெட்டு' படத்திற்கு 7.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம்.  இந்த படத்தில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | வெளியானது பத்து தல... ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ்... மிரட்டல் கொண்டாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News