Thunivu Varisu Chennai Rohini Theatre: இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய  இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு  ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. இன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் கொண்டாடினர். 


மேலும் படிக்க | Varisu Movie Review: வாரிசு படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்