தென்னிந்தியாவின் இந்த திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
கடந்த ஆண்டு வெளியான கார்கி முதல் விக்ரம் வரையிலான சில தென்னிந்திய திரைப்படங்கள் எந்த காலத்திலும் பார்க்க ஏற்ற சிறந்த த்ரில்லர் படங்களாக உள்ளது.
1) 'விக்ராந்த் ரோனா - அனுப் பந்தாரி இயக்கத்தில் சுதீப் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஒரு பீரியட் க்ரைம் த்ரில்லர் படம் தான் 'விக்ராந்த் ரோனா'. அதிக வசூல் செய்த கன்னட படங்களில் இந்த படமும் ஒன்றாகும். மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெறும் கொடூரமான கொலைகளுக்கு பின்னால் உள்ள காரணத்தை போலீசார் கண்டறிவதை சிறந்த த்ரில்லிங் அனுபவத்துடன் இந்த படம் காட்டுகிறது. 3டி எஃபெக்டில் அமைந்த இந்த டார்க் பேண்டஸி படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நீதா அசோக், நிரூப் பந்தாரி, மதுசூதனன் ராவ் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது.
2) கேஜிஎஃப் 2 - 'கேஜிஎஃப்' படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ஈஸ்வரி ராவ் போன்ற பலர் நடித்துள்ளனர். கன்னட மொழியில் உருவான இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காண கிடைக்கும்.
மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் - அனிருத்! இயக்குனர் யார் தெரியுமா?
3) விக்ரம் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2022-ம் ஆண்டில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம் 'விக்ரம்'. கமல்ஹாசனுக்கு இந்த படம் சிறந்த கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்தது. இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ரமேஷ் திலக் போன்ற பலர் நடித்திருந்தனர். வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்ற இந்த படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது.
4) துணிவு - ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படமான 'துணிவு' நல்ல வரவேற்பை பெற்றது. வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படம் நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் காண கிடைக்கிறது.
5) காந்தாரா - ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த காந்தாரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கன்னட மொழி திரைப்படமானது மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி போன்ற பலர் நடித்திருந்தனர். அதிகளவில் வசூலை அள்ளிக்குவித்த இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காண கிடைக்கிறது.
6) யசோதா - ஹரி-ஹரிஷ் இயக்கத்தில், சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு மொழி ஆக்ஷன் த்ரில்லர் படமான 'யசோதா' நல்ல வரவேற்பை பெற்றது. வாடகை தாய் முறையில் அப்பாவி பெண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை இப்படம் காட்டுகிறது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், திவ்யா ஸ்ரீபதா போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் காண கிடைக்கிறது.
7) கண்ணை நம்பாதே - மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தமிழில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் தான் 'கண்ணை நம்பாதே'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, வசுந்தரா, சதீஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த படம் விறுவிறுப்பாகவும், த்ரில்லிங்காகவும் அமைந்துள்ளது. இப்படம் நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் காண கிடைக்கிறது.
8) படா - கமல்.கே.எம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மலையாள மொழி படமான 'படா' நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ், விநாயகன் மற்றும் திலீஸ் போத்தன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். உயிரை விடவும் தங்களுடைய சமூகம் முன்னேற வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு போராடும் நான்கு பேரின் கதை தான் இந்த படம். இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காண கிடைக்கிறது,
9) ஜன கண மன - டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஜன கண மன'. இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு, பசுபதி ராஜ், ஜிஎம் சுந்தர், மம்தா மோகன்தாஸ், ஸ்ரீ திவ்யா போன்ற பலர் நடித்துள்ளனர். கல்லூரி பேராசிரியர் ஒருவரின் கொலை சம்பவம் நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறது, அதன்பின்னர் நடக்கும் பல விஷயங்களை இப்படம் காட்டுகிறது. இப்படம் நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் காண கிடைக்கிறது.
10) கார்கி - கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கார்கி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை தனது தந்தை குற்றவாளியல்ல என்பதை நிரூபிக்க போராடுகிறார், பின்னர் தனது தந்தை குற்றவாளி என்பதை தெரிந்துகொண்டதும் அவருக்கு நேர்மையாக தண்டனை வாங்கி கொடுக்கிறார். இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யத்தை தரும் படமாக அமைந்துள்ளது. இப்படம் சோனி லிவ் தளத்தில் காண கிடைக்கிறது.
மேலும் படிக்க | டிக்கெட் புக்கிங்கில் தட்டித் தூக்கும் PS2: ஓர் அலசல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ