Top 10 Beautiful Women In The World Indian Celebrity : பெண்கள் என்றாலே அழகுதான் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அந்த அழகில் எது பெஸ்ட் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வர்ல்ட், மிஸ் இந்தியா என பல்வேறு போட்டிகளை நடத்துகின்றனர். அந்த வகையில், உலகின் டாப் 10 அழகான நடிகைகளின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்பாேம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக நடிகைகளில் அழகானவர்:


லண்டனை சேர்ந்த முக சிகிச்சை நிபுணர் டாக்டர். ஜூலியன் டி சில்வா உலகில் இருக்கும் அத்தனை நடிகைகளின் லிஸ்டையும் எடுத்து, ஒரு சிறு கணக்கின் மூலம் டாப் 10 பெண் பிரபலங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த லிஸ்டில் நடிகைகள் மட்டுமல்ல, சில பாடகிகளும் இருக்கின்றனர். ஜெண்டயா, பெல்லா ஹடிட், ஆரியானா கிராண்டே உள்பட பல பிரபலங்கள் இருக்கின்றனர். அதில், ஒரு இந்திய நடிகையின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. 


இந்திய நடிகை:


அந்த லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் இந்திய நடிகைக்கு 38 வயதாகிறது. சுமார் 18 வருடங்களாக திரையுலகில் இருக்கும் இவர் முதன் முதலில் கன்னட திரையுலகில்தான் அறிமுகமானர். ஆனால், பாலிவுட் இவரை தன் வசம் இழுத்துக்கொண்டது. அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்த இவர், இப்போது இந்தியாவின் டாப் ஹீரோயினாக திகழ்கிறார். 


இவரும், பல பெண்களை போல காதலில் விழுந்து-எழுந்தவர்தான். 2018ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 


இவர்தான் அந்த நடிகை!


அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை தீபிகா படுகோன்தான். இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் ‘கோச்சடையான்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். ஆங்கிலத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இப்படி உலகளவில் பிரபலமாகி இருக்கும் இவர், அழகான பிரபலங்களின் லிஸ்டில் 9வது இடத்தில் இருக்கிறார். 


மேலும் படிக்க | நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?



பிற நடிகைகள்:


தீபிகா படுகாேனை தவிர, இந்த லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் பிரபலங்கள் யார் யார்? 


முதலிடத்தில் இருக்கும் நடிகை, ஜோடி கோமர். இவர், இங்கிலாந்தை சேர்ந்தவர். ஸ்பைடர் மேன் படங்கள் மூலம் புகழ் பெற்ற ஜெண்டையா, இரண்டாம் இடத்திலும், மாடலான பெலா ஹடிட் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இவர்களை தவிர பாடகிகளான பியான்சே, ஆரியானா கிராண்டே, டெயிலர் ஸ்விஃப்ட் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கின்றனர். ஜௌர்டன் டன், கிம் கிம் கார்டாஷியன் ஆகியோர் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருக்கின்றனர். தீபிகாவிற்கு அடுத்த படியாக ஹோயியோன் ஜுங் 10வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறார். 


தீபிகா, குழந்தை பெற்ற பிறகு தற்போது ரெஸ்ட் எடுத்து வருகிறார். இவர், அஜய் தேவ்கன் உடன் சேர்ந்து நடித்திருக்கும் சிங்கம் அகெய்ன் திரைப்படம் வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்தியில் வெளியாக இருக்கிறது. இதில் இவர் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


அழகை எப்படி கணக்கிடுகின்றனர்? 


இந்த லிஸ்டை, கோல்டன் ரூல் ரேஷியோ எனும் முறைப்படி அழகை கணக்கிட்டு தயாரித்திருக்கின்றனர். இதில் ஒருவரது முகத்தின் அளவு மற்றும் நீளம் ஆகியவை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில்தான், மேற்கூறிய நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அவர் அழகானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 


மேலும் படிக்க | டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ