இந்த படமும் லிஸ்ட் ல இருக்கா? இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது?
Top 10 Most Searched Movies in 2023 on Google: ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கூகுளில் உலகளவில் பிரபலமான உள்ளூர் திரைப்படத் தேடலிலும் 3வது இடத்தை பிடித்துள்ளது.
கூகுள் ஆண்டு தேடல் 2023: ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டாப் 10 பட்டியலை வெளியிடும் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளது.
இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியல்:
2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், உலகின் முன்னணி தேடுதள நிறுவனமான கூகுள் தற்போது இந்த ஆண்டுக்கான தரவுகளை ஒன்றின் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் சிறந்த டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் என்னென்ன திரைப்படங்கள் இடம்பெற்று உள்ளது என்பதை இந்த தொகுப்பில் விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் 2023 ஆம் (Google reveals 10 most-searched films of 2023) வருடத்தில் அதிகம் தேடப்பட்ட படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது. அதில் ஷாருக் கானின் ஜவான் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து இருக்கிறது. மேலும் அது உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏழாம் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்பட்ட படமாக மாறி இருக்கிறது. அடுத்து எட்டாவது இடத்தில் விஜய்யின் லியோ, மற்றும் பத்தாம் இடத்தில் வாரிசு ஆகிய படங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
மேலும் படிக்க | ரஜினி கோயிலில் நாககிரீடம் அமைத்து சிறப்பு வழிபாடு செய்த ரசிகர்....!
இந்த ஆண்டின் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் பட்டியல்:
1.) ஜவான் (Jawan)
2.) கதர் 2 (Gadar 2)
3.) ஓபன்ஹெய்மர் (Oppenheimer)
4.) ஆதிபுருஷ் (Adipurush)
5.) பதான் (Pathaan)
6.) தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)
7.) ஜெயிலர் (Jailer)
8.) லியோ (Leo)
9.) டைகர் 3 (Tiger 3)
10.) வாரிசு (Varisu)
இது தவிர சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த கதர் 2 இந்தி திரைப்படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த மூன்றாவது இடத்தை கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படமும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன்ஹெய்மர் மட்டுமே. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். அடுத்ததாக மீண்டும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான சர்ச்சைக்குரிய படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் உள்ளது. இந்த பட்டியலில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த லியோ படம் எட்டாவது இடத்திலும், பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த டைகர் 3 திரைப்படம் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது, அதேசமயம் வாரிசு திரைப்படம் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக “எனது அருகே” என்ற வார்த்தையைக் கொண்ட தேடலில் ஜெயிலர் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படம் எனது அருகே எந்தத் திரையரங்கில் ஓடுகிறது என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? இவர்தான் அடுத்த தொகுப்பாளர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ