2023ஆம் ஆண்டின் டாப் 10 கோலிவுட் இயக்குநர்கள்! டாப்பில் இருப்பது யார் தெரியுமா?
Top 10 Directors of Kollywood 2023: 2023ஆம் ஆண்டு வெகு சில நாட்களில் முடிவுபெற உள்ளதை தொடர்ந்து, இந்த வருடம் தமிழ் சினிமாவில் டாப் 10 இடத்தை பிடித்த இயக்குநர்கள் யார் யார் என்பதை பார்ப்போமா?
கோலிவுட் திரையுலகில், இந்த 2023ஆம் ஆண்டு பல இளம் இயக்குநர்கள் தங்களின் படைப்புகளால் ரசிகர்களை ஈர்த்துள்ளனர். ஏற்கனவே டாப்பில் இருக்கும் இயக்குநர்கள் பலர் தங்களது படங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியுள்ளனர். அப்படி, இந்த ஆண்டு ரசிகர்களின் மனங்களில் டாப் 10 இடங்களை பிடித்த இயக்குநர்களின் பட்டியல்லை இங்கு பார்ப்போம்.
10.மாரி செல்வராஜ்:
‘பரியேறும் பெருமாள்’ எனும் படைப்பை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர், மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த மாமன்னன் படம் இந்த ஆண்டு வெளியானது. இவர், இந்த ஆண்டின் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் இயக்குநர்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சம்பளம், ரூ.5 கோடி என கூறப்படுகிறது.
9.மகிழ் திருமேனி:
அஜித்தை வைத்து ‘விடா முயற்சி’ எனும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கி வருபவர், மகிழ் திருமேனி. 2022ஆம் ஆண்டு கடைசியாக இவரது ‘கலகத்தலைவன்’ படம் வெளியானது. இவரது த்ரில்லர் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர், இந்த ஆண்டின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். இவரது சம்பளம் ரூ.8 கோடியாகும்.
8.வெற்றிமாறன்:
பெயருக்கு ஏற்றார் போல, இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றிதான். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற வெற்றி படங்களை கொடுத்த இவர், இந்த ஆண்டு காமெடி நடிகர் சூரியை தனது விடுதலை பாகம் 1 படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவரது மொத்த சம்பளம், ரூ.10 கோடி என கூறப்படுகிறது.
7.வெங்கட் பிரபு:
கோலிவுட்டின் ஜாலி இயக்குநர் என பெயரெடுத்தவர், வெங்கட் பிரபு. இந்த ஆண்டு, இவர் இயக்கிய ‘கஸ்டடி’ படம் வெளியானது. இதையடுத்து, விஜய்யை வைத்து ‘தளபதி 68’ படத்தையும் இயக்கி வருகிறார். இவர் வாங்கும் மொத்த சம்பளம் ரூ.15 கோடி என கூறப்படுகிறது.
6.பா.இரஞ்சித்:
தமிழ் சினிமாவின் புரட்சிமிகு இயக்குநர்களுள் ஒருவர், பா.இரஞ்சித். தனது படங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கும் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர், விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம், வரும் ஜனவரி மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.இரஞ்சித் மொத்தம் ரூ.20 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
5.நெல்சின் திலீப்குமார்:
தான் இயக்கிய வெகு சில படங்கள் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்தவர், நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்து ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை எடுத்தார். இந்த படம், வசூல் மற்றும் விமர்சனத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதையடுத்து, இவர் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார். இவர் இந்த ஆண்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலில் 5வது இடத்தை பெற்றுள்ளார். இவரது மொத்த சம்பளம் மொத்தம், ரூ.20 கோடி என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அடேங்கப்பா.. ஒரே வருஷத்துல இத்தனை ஃபாலோவர்ஸ்களா.. இவங்க தான் 2023ல் டாப்
4.ஹெச்.வினோத்:
ஹெச்.வினோத், இந்த ஆண்டு அஜித்குமாரை வைத்து ‘துணிவு’ படத்தை எடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததை ஒட்டி, அடுத்து இவரும் கமல்ஹாசனும் ஒரு படத்தில் இணைவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், சில காரணங்களுக்காக இந்த படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர், அதிக சம்பளம் வாங்கும் டாப் இயக்குநர்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சம்பளம், ரூ.25 கோடியாம்.
3.ஷங்கர்:
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் என கூறப்படுபவர், ஷங்கர். இவர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர் வாங்கும் மொத்த சம்பளம், ஊ.30 கோடியாம்.
2.மணிரத்னம்:
கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தையும் இந்த ஆண்டு அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கியவர், மணிரத்னம். இவர், தமிழ் சினிமாவின் லெஜண்ட் இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மணிரத்னம், ஒரு படத்திற்கு ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
1.லோகேஷ் கனகராஜ்:
வெகு சில படங்களையே இயக்கியிருந்தாலும், 5 வருடத்திற்குள் மிகப்பெரிய இடத்திற்கு சென்று விட்டவர், லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் வாங்கும் சம்பளம், ரூ.50 கோடியாம். லோகேஷ், அடுத்து ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்க இருக்கிறார்.
மேலும் படிக்க | ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்? அவரே வெளியிட்ட பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ