Top 5 Tamil Hit Movies 2024 : தமிழ் திரையுலகை பொருத்தவரை, இந்த 2024ஆம் வருடம் ஆரம்பித்த முதல் 6 மாதங்களுக்கு எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த 6 மாதங்கள் அப்படியே அதற்கு தலைகீழாக இருக்கின்றன. ஜூலை மாதத்திற்கு பிறகு வெளியாகும் படங்கள் அனைத்துமே பெரிய ஹீரோக்களின் படங்களாக இருக்கின்றன. அப்படி வெளியான படங்களில், ஒரு சில படங்கள் வெற்றியையும் ஒரு சில படங்கள் படு தோல்வியையும் அடைந்திருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டில் வெளியான படங்களில் எது அதிக வசூலை பெற்று டாப் 5 இடத்தை பெற்றிருக்கின்றன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5. வேட்டையன்:


ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, இம்மாதம் 10ஆம் தேதி வெளியான படம், வேட்டையன். இதனை, டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான படம் என்றாலும், வசூலில் மடமடவென நாளுக்கு நாள் இப்படம் முன்னேறி வருகிறது. வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 60 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம், 3 நாட்களுக்குள்ளாகவே 100 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகிறது.



இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. 


4.மகாராஜா:


விஜய் சேதுபதி நடிப்பில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் மகாராஜா. இதனை நிதிலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இதில் சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், மமிதா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 



பாலியல் வன்புனர்வு குறித்து பேசிய இந்த படம், மொத்தமாக ரூ.110 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்தது. ஓடிடியில் வெளியான பிறகும் இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. டாப் 5 படங்களின் லிஸ்டில் இது 4வது இடத்தை பிடித்திருக்கிறது.


3.இந்தியன் 2:


 


கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம், இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும் விமர்சனத்தில் பெரிய அடி வாங்கியது. இதையடுத்து, தியேட்டரில் வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.



ரூ 250 -300 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மொத்தமாக 151 கோடி வசூலித்தது. இருப்பினும் 100 கோடிக்கும் மேல் வசூலித்த படம் என்பதால் டாப் 5 கோலிவுட் படங்களின் லிஸ்டில்3வது இடத்தில் இருக்கிறது. 


மேலும் படிக்க | கூலி to குட் பேட் அக்லி..2025 பெரிய படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!!


2.ராயன்:


நடிகர் தனுஷ் நடித்து இயக்கியிருந்த படம், ராயன். இந்த படத்தில் தனுஷுன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 



செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இசையும் பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன. இந்த படம், மொத்தமாக சுமார் ரூ.160 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் டாப் 5 படங்களின் லிஸ்டில் இது 2வது இடத்தில் உள்ளது.


1.தி கோட்:


விஜய், தனது கடைசி படத்திற்கு முந்தைய படமாக தி கோட் (The Greatest Of All Time) திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரபு தேவா, ஜெயராம், பிரசாந்த், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 



இந்த படம், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. சுமார் 380 கோடி செலவில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.456 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான பிறகும் கூட, ஸ்டிரீமிங் இடத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 2024 Hit Movies : 2024ல் ரிலீஸான 124 படங்களில் 6 படங்கள் மட்டுமே ஹிட்! என்னென்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ