இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பான் இந்தியா படங்களின் வருகை அதிகரிப்பால் ஏ லிஸ்ட் வகை நடிகர்களின் சம்பளமும் சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில்  தென்னிந்திய சூப்பர் ஸ்டாரர்களும் பாலிவுட் நடிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் 100 கோடி சம்பளம் வாங்கும் டாப் 8 நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1  ஷாருக்கான்


ஒரு படத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இந்தியாவின் பணக்கார நடிகரான ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார். பதான் படத்திற்காக ஷாருக் 120 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் லாபத்தில் ஷாருக்கானுக்கு 60% பங்கு கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


2.அமிர் கான்


இந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது அமீர்கான். இவர் ஒரு படத்தில் நடிக்க 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அவை தவிர அமீர்கானுக்கு தான் நடிக்கும் படத்தில் இருந்து வரும் லாபத்தில் 70% வரை பெறுகிறாராம்.


3.சல்மான் கான்


பாலிவுட்டின் பைஜான்  சல்மான் கானும் ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான டைகர் ஜிந்தா ஹை படத்துக்காக நூற்று முப்பது கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர படத்தின் லாபத்திலும் சல்மான் கானுக்கு பங்கு கிடைத்தது


4 அல்லு அர்ஜுன்


புஷ்பா படத்திற்கு பிறகு உலக அளவில் கவனம் பெற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒரு படத்துக்காக 100 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவர். இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை பெற்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் 2021 அதிக வசூல் செய்த இந்திய படமாகவும் புஷ்பா படம் அமைந்தது


மேலும் படிக்க | விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லோகேஷ் கனகராஜ்! எந்த படம் தெரியுமா?


5.பிரபாஸ்


பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். அந்த அளவுக்கு பாகுபலி படம் பிரபாசை உலக அளவில்  பிரபலமாக்கியது . பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் சலார், ஆதி புரூஸ் படங்களுக்கு 150 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது


6.விஜய்


இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவரும் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார். அதன்படி விஜய் ஒரு படத்திற்கு 120  வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. கடைசியாக இவர் வாரிசு படத்துக்காக 125 கோடி சம்பளமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது


7.ரஜினிகாந்த்


பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை ஆண்டவர் நடிகர் ரஜினிகாந்த். இவரும் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் உள்ளார். அதன்படி இவர் ஒரு படத்துக்கு 150 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. கடைசியாக இவர் நடித்த அண்ணாத்த படத்துக்காக 125 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது.


8. அக்க்ஷய் குமார்


சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்த சாம்ராட் பிருதிவிராஜ் உள்ளிட்ட சில படங்கள் பார்வையாளர்களை கவர தவறினாலும் அவர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவே இருக்கிறார். படே மியான் சோட் மியான் 2 படத்தில் நடித்த 135 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | பயில்வான் ரங்கநாதனுக்கு 2 ஆஸ்கார் விருது..குழப்பும் வெங்கட்பிரபுவின் வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ