பயில்வான் ரங்கநாதனுக்கு 2 ஆஸ்கார் விருது..குழப்பும் வெங்கட்பிரபுவின் வாழ்த்து

இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற பயில்வான் ரங்கநாதன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2023, 10:45 AM IST
  • இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
  • இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • பயில்வான் ரங்கநாதனுக்கு 2 ஆஸ்கார் விருது.
பயில்வான் ரங்கநாதனுக்கு 2 ஆஸ்கார் விருது..குழப்பும் வெங்கட்பிரபுவின் வாழ்த்து title=

பயில்வான் ரங்கநாதன் நடிகர், திரைப்பட விமர்சகராவார். இவர் குறிப்பாகத் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், துணை பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் இவர் மிஸ்டர் சென்னை பட்டத்தைப் பெற்றுள்ளர். இவரது உடல் வாகைப் பார்த்து எம். ஜி. இராமச்சந்திரன் பயில்வான் என்று அழைத்தார். அதுவே இவரது அடைமொழியாக ஆனது. இவர் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியர் வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். மேலும் தற்போது இவர் திரைப்படங்கள் பற்றி இதழ்களில் விமர்சனமும் எழுதிவருகிறார்.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் இசை வெல்லம் பயில்வான் ரெங்கநாதன் சாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு பெருமையான தருணம். உங்கள் பணியின் மிகப்பெரிய ரசிகன் சார். மேலும் விபரங்களுக்கு நாளை (இன்று) மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவை பார்க்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தன்னை விமர்சித்த தயாரிப்பாளருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சமந்தா !

இந்த பதிவை பார்த்து குழம்பிப் போன ரசிகர்கள், இன்று மாலை என்னதான் சொல்லப்போறாங்க என்று வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியாக உள்ள இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டைம்லெஸ் லவ் என்கிற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. 

இத்திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. க்ரித்தி ஷெட்டி, சரத் குமார், பிரியாமணி, ரவி பிரகாஷ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News