எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘RRR’ திரைப்படத்தின் சண்டை காட்சி இன்று இணையத்தில் வைரலாகிறது. இந்த சண்டைக் காட்சி ஒரு காவியம் படைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல இயக்க்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியும் அவரது படபிடிப்புக் குழுவினரும் மும்முரமாக படபிடிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘RRR’ படபடிப்பின் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளன. அதிலும் ஒரு சண்டை காட்சியின் வீடியோ இணையத்தில் சூப்பர் ரவுண்ட் வருகிறது.
‘RRR’ திரைப்பட படபிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ‘RRR’  திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த சண்டைக் காட்சியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது.


கோமராம் பீம் (Komaram Bheem) கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, அல்லூரி சீதாராம ராஜு (Alluri Seetharama Raju) வேடத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கிறார்.


சில நாட்களுக்கு முன்பு, ‘RRR’  திரைப்படத் தயாரிப்பாளர்கள் BTS footageகளைப் பகிர்ந்து கொண்டனர், அதில், ராஜமெளலி, படப்பிடிப்பு குழுவினருக்கு காட்சிகளை விளக்கிக் கொண்டிருக்கிறார். சில சண்டைக் காட்சிகள் இரவில் படமாக்கப்படுகின்றன.
வீடியோவைப் பகிர்ந்துள்ள, RRR குழு, "இதற்கு மேல் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறோம். #RRRDiaries #RRRMovie #RRR (sic)" என்று எழுதியுள்ளது.



ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரின் உதவியாளர் வேதா, இந்த வீடியோவில் வந்து, படபிடிப்பில் என்ன நடக்கிறது என்பது குறித்த விளக்கத்தைத் தருகிறார். "நாங்கள் ஒரு பெரிய சண்டைக் காட்சியை படமாக்குகிறோம். இப்போது இரவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதை திரையரங்குகளில் பார்க்கும்போது, அது வேறு லெவலில் இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
ராஜமெளலியின் RRR பலரின் எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது. ஆலியா பட் விரைவில் ‘RRR’ திரைப்படத்தில் இணைவார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம் சரணின் ஜோடியாக நடிக்கிறார் ஆலியா பட்.


2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. முன்னதாக, 2021 ஜனவரி 8 ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட முடக்கநிலையால் திரைப்படத்தின் வேலைகளும் முடங்கிப் போயின.


‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அஜய் தேவ்கன், அலிசன் டூடி, ஒலிவியா மோரிஸ், ரே ஸ்டீவன்சன் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR