விஜய் - திரிஷா காதல் விவகாரம்..! 15 ஆண்டுகளாக உலாவும் கிசுகிசு
விஜய் - திரிஷா மீண்டும் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இருவரை பற்றிய கிசுகிசு 15 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் மற்றும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா இருவரை சுற்றியும் எப்போதும் கிசுகிசுக்கள் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். இவர்கள் இருவரைப் பற்றிய கிசுகிசு 2005 ஆம் ஆண்டு கில்லி படத்தில் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு குருவி படத்தில் அவர்கள் இணைந்தது நடித்தபோது, பல கோணங்களில் கதைகள் பரவத் தொடங்கியது. சில பேட்டிகளில் திரிஷாவிடமே விஜய் உடனான உறவு குறித்து வெளிப்படையாக கேள்விகள் வைக்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறினார்.
மேலும் படிக்க | வாரிசு படத்தில் குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?
ஆனால், திரிஷாவுடனான பழக்கத்தால் விஜய் வீட்டில் குடும்ப சண்டை என்றெல்லாம் கதைகளை சிலர் பரப்பினர். அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தில் திரிஷா - விஜய் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் தன்னுடைய முழு காட்சி பகுதிகளையும் நடித்து முடித்துள்ளார். இப்போது கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரிஷாவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சண்டை காட்சிகள் மட்டுமல்லாது காஷ்மீரில் இருக்கும் சூழலுக்கு ஏற்ப பாடல்களும் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் திரிஷாவைத் தவிர சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், சாண்டி ஆகியோரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். திரிஷா தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் லியோ சூட்டிங்கில் இணைந்த புகைப்படத்தை ஏற்கனவே பகிர்ந்திருந்தார். மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தின் மூலம் இணைந்திருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ