`பேட்ட` திரைப்படத்தில் `சரோ`-வாக நடிக்கின்றார் நடிகை த்ரிஷா...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `பேட்ட` திரைப்படத்தில் நடிகைத்ரிஷா `சரோ` என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தில் நடிகைத்ரிஷா 'சரோ' என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத்.
பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் அதிகாரப்பூர்வ தகவகள் வெளியாகவில்லை. அந்த வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பட்டியலை நேற்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்தநிலையில் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சரோ என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.