திரிஷா தனது ரீ என்ட்ரி மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த வாரம் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள தி ரோடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அருண் வசீகரன் எழுதி இயக்கிய இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா கிருஷ்ணன், மியா ஜார்ஜ், டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, செம்மலர் அன்னம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கப்பட்டது. சாம் சிஎஸ் படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைத்துள்ளர்.  கே.ஜி.வெங்கடேஸ் ஒளிப்பதிவு, சிவராஜ் எடிட்டிங் செய்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வெளியானது 'லியோ' படத்தின் மாஸ் ட்ரெய்லர்.. விஜய் ரசிகர்களுக்கு இதோ ட்ரீட்



திரிஷா தனது கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் தனது மகனுடன் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார். திரிஷா மற்றும் சந்தோஷ் பிரதாப் அவர்களின் மகன் பிறந்தநாளை ஒட்டி கன்னியாகுமரி வரை சாலை வழியாக பயணம் செல்ல திட்டமிடுகின்றனர். மறுபுறம் ஷபீர் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.  அந்த கல்லூரியில் ஒரு மாணவி தன்னை காதலிக்கும் படி அவரை வற்புறுத்தல் செய்கிறாள். இதனால் அவரின் வேலையும் பறிபோகிறது.  இந்நிலையில் இந்த இருவரின் வாழ்க்கையும் ஒரு பைபாஸ் சாலையில் இணைகிறது, அதன் பின்பு என்ன ஆனது என்பதே தி ரோடு படத்தின் கதை.


த்ரிஷா வழக்கம்போல திரையில் ஜொலிக்கிறார்.  தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  குறிப்பாக தனது கணவருக்கு என்ன ஆனது என்று மருத்துவமனைக்கு செல்லும் அந்த காட்சியில் தனது நடிப்பால் அனைவரையும் அசர வைத்துள்ளார்.  சார்பட்டா பரம்பரை, கிங் ஆப் கோத்தா படத்திற்கு பிறகு ஷபீருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  அதனை சிறப்பாகவே கையாண்டு உள்ளார். மேலும் ஒட்டுமொத்த படத்தில் இவரது கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருந்தது.


ஷபீரின் அப்பாவாக வரும் வேலராமமூர்த்தி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.  பைபாஸ் சாலையில் மர்மமான முறையில் நடக்கும் மரணங்களை விசாரணை செய்து கண்டுபிடிக்கும் இடங்கள் விறுவிறுப்பாக செல்கிறது.  இந்த விறுவிறுப்பிற்குள் நம்மை கொண்டு செல்ல முதல் பாதி முழுக்கவே எடுத்துக் கொள்கின்றனர்.  இரண்டாம் பாதி பைபாஸ் சாலையை போல் அதிவிரைவாக செல்லும் அதே நேரத்தில் டிராபிக்கில் சிக்கிக் கொண்டது போல் மெதுவாகவே செல்கிறது முதல் பாதி.  சாம் சிஎஸ் வழக்கம்போல பின்னணி இசையில் அசத்தியுள்ளார்.  குறிப்பாக த்ரிஷாவும் எம்எஸ் பாஸ்கரும் மலைப்பகுதிகளில் ஒருவரை தேடும்போது இந்த காட்சியில் வரும் பின்னணி இசை அடுத்து என்ன நடக்கும் என்று நம்மளை பதப்பதைக்க செய்கிறது. 


உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்றாலும் நிறைய லாஜிக் ஓட்டைகள்  உள்ளது.  கிளைமாக்ஸ்ல் வரும் சில ட்விஸ்ட் நன்றாக இருந்தாலும் அதற்குள் படம் எப்போது முடியும் என்ற எண்ணம் நமக்குள் தோன்றிவிடுகிறது.  காரணம் படத்தின் நீளம், முடிந்தவரை இன்னும் சில காட்சிகளை ட்ரிம் செய்து இருக்கலாம்.  தி ரோடு படம் பைபாஸ் சாலை போல சீறி பாய்ந்தாலும், ஆங்காங்கே சில ஸ்பீட் பிரேக்கர்களும் வருகின்றன.


மேலும் படிக்க | லியோ சோலோ ரிலீஸ் இல்லை! இன்னொரு படமும் வெளியாகிறது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ