ஒவ்வொரு ரசிகர்களுக்கும் எந்த அளவுக்கு தனித்தனியாக நடிகர்கள், நடிகைகளை பிடிக்குமோ அதே அளவுக்கு, படத்தில் அமையும் ஜோடிகளும் பிடித்துவிடும்.  அந்தவகையில் விஜய் ரசிகர்கள் சிலருக்கு விஜய் - த்ரிஷா ஜோடி பிடித்தமான ஒன்று. விஜய்-த்ரிஷா முதன்முதலாக இணைந்து நடித்த 'கில்லி' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது, இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பலருக்கும் இவர்கள் பேவரைட் ஜோடியாக மாறிவிட்டனர்.  இதனை தொடர்ந்து இந்த இருவரது ஜோடி இணைந்து 'திருப்பாச்சி', 'ஆதி' மற்றும் 'குருவி' போன்ற படங்களில் நடித்தனர்.  அதன்பின்னர் இவர்களை திரையில் ஒன்றாக இணைந்து பார்க்க முடியவில்லை. இருவரும் தனித்தனியாக வெவ்வேறு ஜோடிகளுடன் நடிக்க தொடங்கிவிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகர்கள் பலரும் இந்த ஜோடியை மிஸ் செய்துவந்த நிலையில், கிட்டத்தட்ட 14 வருட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி-67' படத்தில் தான் விஜய்யுடன், த்ரிஷா ஜோடி சேரப்போவதாக கூறப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்துள்ளது.  ஏற்கனவே 'தளபதி-67' படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போவதாக சில செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்கவிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது, ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



மேலும் படிக்க | மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டார் வீட்டில் புதிய வாரிசு!


தற்போது நடிகர் விஜய் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படமான 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.  அதனையடுத்து நடிகை த்ரிஷா மணி ரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தில் இவரது லுக்கை பார்த்த பலரும் த்ரிஷாவின் இளமை மாறாத அழகை புகழ்ந்து வருகின்றனர்.



மேலும் படிக்க | 'தளபதி-67' படத்தில் இத்தனை வில்லன்களா? அடுக்கடுக்கடுக்காக வெளியான அப்டேட்டுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ