ரோஜா படம் மூலம் அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே இசையில் புதுமையை புகுத்திய ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தது. அதனையடுத்து தமிழில் அவர் தொட்டதெல்லாம் துலங்க அவருக்கு இசைப்புயல் என்ற பட்டம் கிடைத்தது. 90களில் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டடித்தன. அதனைத் தொடர்ந்து பாலிவுட் சென்ற அவர் அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஹாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் தனது திறமையை நிரூபித்த ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்கள், கோல்டன் க்ளோப், கிராமி உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துவரும் ரஹ்மான், தற்போது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இசை கச்சேரி செய்யவிருக்கிறார். இதற்காக ஆகஸ்ட் 28 ஆம் தேதி கனடாவின் டொராண்டோவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இவர் மேலும் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். 


இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அதற்கான டிக்கெட்டுகளை ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில், அசைவ உணவுகள் எதுவுமின்றி, முழுமையான சைவ உணவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் "அடுத்த பத்து நாட்களுக்கு சைவ உணவு உண்பவராக மாறுகிறேன்" என்கிற கேப்ஷனையும் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் ஒரு தீவிர அசைவ உணவு உண்பவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தற்போது அவரது சைவ உணவு பற்றிய லேட்டஸ்ட் பதிவு அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  


 



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில்ல் பார்த்திபனின் 'இரவின் நிழல்' சமீபத்தில் வெளியானது. மேலும், அவரது இசையமைப்பில் விக்ரமின் 'கோப்ரா', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்துக்காக ரஹ்மான் இசையமைத்திருக்கும் பொன்னி நதி பாடல் இன்று மாலை வெளியாவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மீண்டும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்போகும் பிரியங்கா சோப்ரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ