விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் தளபதி 66 படம் குறித்த பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பீஸ்ட், பீஸ்ட் என்று ஒலித்த குரல்கள் இப்போது கூடுதலாக 'தளபதி 66' என்று ஒலிக்க தொடங்கியுள்ளது.  அந்த அளவிற்கு இப்படத்தை பற்றிய தகவல்களை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  இதில் நேஷனல் கிரஷ் என்று கூறப்படும் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.  மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைப்பார் என்றும் கூறப்பட்டது.  படப்பிடிப்பு பூஜையின்போது நடிகர் விஜய்யை பூரிப்போடு ராஷ்மிகா பார்க்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்!


மேலும் நடைபெற்று முடிந்த 'தளபதி 66' பூஜையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார், இந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவியது.  அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரின் மனைவி, ராதிகா சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில், 'தளபதி 66' படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதி செய்தார்.  இந்த மூத்த நடிகர் மட்டுமல்லாது மற்றொரு மூத்த நடிகர் பிரகாஷ்ராஜும் இப்படத்தில் இணைந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.  12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'கில்லி' படத்தில் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் காம்போ மிகுந்த வரவேற்பை பெற்றது, இந்நிலையில் மீண்டும் அவர் இப்படத்தில் இணைந்தால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. .



தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் 'தளபதி 66' படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.  இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.  மேலும் இப்படத்திற்கு ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் ஆகியோர் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளனர், பொதுவாகவே இயக்குனர் வம்சியின் படங்களுக்கு இந்த இருவர்தான் பெரும்பாலும் வசனங்கள் எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கூடுதலாக வசனம் மற்றும் திரைக்கதையை பாடலாசிரியர் விவேக் கவனிக்க, இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.


இப்படத்தில் எடிட்டிங் பணியை பிரவீன் கேஎல் செய்கிறார்.  மேலும் இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக தீபாலி நூரும், உடன், சுனில் பாபு மற்றும் வைஷ்ணவி ரெட்டி புரோடக்சன் டிசைனர் ஆகவும் பணியாற்றுகின்றனர்.  ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.  தற்காலிகமாக'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.  மேலும் யுகாந்தர் விஎஃப்எக்ஸ் பொறுப்பையும், நாகராஜு ஒப்பனை பணியையும் செய்கின்றனர்.


மேலும் படிக்க | மொழிக்கும், உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - கேஜிஎஃப் யஷ்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR