’டான்’ பட்டத்தை திருப்பிக் கொடுத்த சிவா - வாங்க மறுத்த உதயநிதி
’டான்’ படத்தை சிவகார்த்திகேயன் திருப்பிக் கொடுக்க, உதயநிதி ஸ்டாலின் அதனை வாங்க மறுத்துவிட்டார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற டான் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தமிழ் சினிமாவின் ’டான்’ சிவகார்த்திகேயன் என புகழாரம் சூட்டினார். இது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘உதயநிதி ஸ்டாலின் ஜாலியாக கூறிய வார்த்தை அது. அதனை ஜாலியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்’ என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.
மேலும் படிக்க | ’ஆதாரத்தோடு கிசுகிசு பேசுகிறேன்’ கே.ராஜனுக்கு பதிலடி கொடுத்த பயில்வான் ரங்கநாதன்
இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ‘ உதயநிதி ஸ்டாலின் டான் திரைப்பட விழாவில் ஜாலியாக என்னை டான் என கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், அதனை மற்றவர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டுவிட்டனர். பின்னர், சார் உதயநிதி ஸ்டாலின் உங்களை டான் என கூறியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். உண்மையாக சொன்னால், உதயநிதி ஸ்டாலின் தான் டான். தைரியம் உள்ளிட்ட விஷயங்களுக்காக அவரை டான் என கூறலாம்" என கலகலப்பாக பேசினார்.
அவருக்கு பின்னர் பேசிய உதயநிதிஸ்டாலின், "கடந்த 3 நாட்களாக நான், அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கு போனாலும் மூவரும் சந்தித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. எனக்கு டான் பட்டம் வேண்டாம். அது சிவகார்த்திகேயனுக்கே கொடுத்து விடுகிறேன். கேஜிஎப் படம் வந்தபிறகு யார் டான் ஆகனும் அப்படிங்குற போட்டியே இருக்கு. நெஞ்சுக்கு நீதி படம் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும்" என பேசினார்.
மேலும் படிக்க | வலிமையை சாய்த்த கே.ஜி.எப் 2 - பீஸ்ட் நெக்ஸ்ட் டார்கெட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR