ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமலஹாசன் நடித்த படம் வெளி வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூர்யா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார் கமல்ஹாசன்.  மேலும் படத்தில் பணியாற்றிய அனைவரையும் அழைத்து விருந்து சாப்பாடும் போட்டார் கமல்ஹாசன்.  விக்ரம் படம் உலகளவில் அனைவருக்கும் பிடித்த படமாக மாறி உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | முதன் முதலாக வெளியான யோகி பாபு மகனின் புகைப்படம்!


இந்நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்தது ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், அமீர்கான் போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த மேடையில் கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று தெரிவித்தார்.  இப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அருண்ராஜா காமராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


 



போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே நடித்துள்ளார். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. மேலும் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடிக்கும் கழகத் தலைவன் என்ற படத்திற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.


 



மேலும் படிக்க | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உருவாகும் ஆர்யாவின் படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ