டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து தற்போது கோப்ரா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  லலித்குமார் தயாரித்திருக்கும் அந்த படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திரைப்படத்திற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால் கதையில் சில மாற்றங்களையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து செய்ததால் படப்பிடிப்பு நீண்டது.


இதனால் தயாரிப்பாளர் மற்றும் அஜய் ஞானமுத்து இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை இயக்குநர் மறுத்துவிட்டார்.


தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதனால் ஆகஸ்ட் 11ஆம் தேதி கோப்ரா படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்  லலித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் கோப்ரா படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல் இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமமும் கலைஞர் டிவிக்கு விறகப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க | சமந்தா நடனத்தில் மயங்கிய சல்மான்கான் - பாலிவுட் என்டிரிக்கு கிரீன் சிக்னல்


திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஏராளமான படங்களை வெளியிட்டுவருகிறது. சமீபத்தில்கூட டான், விக்ரம் உள்ளிட்ட படங்களை வெளியிட்ட அந்நிறுவனம் நன்றாக லாபம் பார்த்தது.


இதனை அந்நிறுவனத்தின் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலினே விக்ரம் பட வெற்றி விழாவில் கூறியிருந்தார்.அதேபோல், மாதவன் நடித்த ராக்கெட்ரி படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட இருக்கிறார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தச் சூழலில் உதயநிதி அனைவரையும் மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் நான் யாரையும் மிரட்டவில்லை அவர்கள் விரும்புவதால் நான் படத்தை வாங்கி வெளியிடுகிறேன் என உதயநிதி விளக்கமளித்திருந்தார்.


மேலும் படிக்க | பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு அதிர்ச்சி செய்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR